Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 March 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29345

சாலையில் செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நகரில் 3 ரோடு பகுதியில் இந்திரா காந்தி சிலை அருகே சாலையின் மேற்பரப்பிலேயே சாக்கடை நீர் செல்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் தோண்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் இந்த சாக்கடை நீர் சாலையின் மேற்பரப்பில் செல்கிறது. எனவே கழிவுநீர் சாக்கடை கால்வாயில் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29343

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

மற்றவை

தர்மபுரி பிடமனேரி சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப்புற சுவரையொட்டி நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொது மக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நடைபாதையை மக்கள் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-மாதேஷ், பிடமனேரி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29342

குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளது. இந்த எந்திரத்தில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வரவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பஸ்நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மணிகண்டன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29337

பயன்பாட்டுக்கு வருமா? குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் கவுனூர் செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி உடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.-சுரேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29334

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை, கோவில் உள்ளன. இப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை அங்கன்வாடி மையம் அருகே கொட்டி எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29151

மாசடையும் தண்ணீர்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையோரம் உள்ள சாயப்பட்டறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் காவிரி தண்ணீர் மாசடைகிறது. இதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் போன்ற நோய்களால் அவதியடைகின்றனர். எனவே இதனை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-பிரவீன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29150

அகற்ற வேண்டிய சாக்கடை கழிவுகள்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி மெயின் ரோட்டில் சில நாட்களுக்கு முன்பாக கழிவுநீர் வாய்க்காலில் இருந்து திடக்கழிவுகளை அள்ளி சாலை ஓரத்தில் கொட்டி இருந்தனர். அந்த இடம் பிரதான சாலையாக இருப்பதால் அவ்வழியே சென்ற வாகனங்கள் அந்த திடக்கழிவு மீது ஏறி சென்றது. இதனால் அவ்வழியே உள்ள வீடுகளின் முன்பாக திடக்கழிவுகள் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் வாய்க்காலில் இருந்து எடுக்கப்படும் திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29149

மின்ஒயர்கள் சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பஸ் நிலையத்தில் பேரூராட்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மின் இணைப்புகள் தனித்தனியாக உள்ளன. ஆனால் மோகனூர் போலீஸ் நிலையத்தின் பின்பகுதியில் எந்த ஒயர் எந்த கடைக்கு செல்கின்றது என தெரியாத அளவிற்கு தாறுமாறாக கிடக்கிறது. சில மின்ஒயர்கள் வாழைமரத்தின் மீது உரசியவாறு செல்கிறது. எனவே மின் விபத்துகள் ஏற்படும் முன் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்ஒயர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜபாண்டியன், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29146

சாலையை அகலப்படுத்த வேண்டும்

சாலை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு சந்திப்பு வரை கழிவுநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. நாலுகால் மண்டபத்தில் இருந்து 4 ரோடு சந்திப்பு வரை உள்ள வழித்தடங்களில் மிகவும் குறுகிய சாலையாக இருக்கிறது. இந்த வழியில் தற்போது கழிவுநீர் கால்வாயின் அகலத்தை அதிகப்படுத்தி அமைப்பதால் சாலை மேலும் குறுகலாக உள்ளது. எனவே சாலையை அகலப்படுத்தி சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கவுதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#29145

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பொன்னம்பாளையத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வவோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் கீழே விழுந்து அடிபடுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருள், பொன்னம்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29144

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் பெயர் பலகையில் எழுத்து பிழை இருந்தது என 'தினத்தந்தி' புகார் பெடடி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பெயரை திருத்தம் செய்து உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-சந்தோஷ், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29138

காவலர்கள் இல்லாத சோதனை சாவடி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் நாள்தோறும் இரு காவலர்கள் பணியமர்த்துப்பட்டு இரவு பகலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக முறையான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாமல் உள்ளதால் சோதனைசாவடி காவலர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் தற்போது இந்த சோதனை சாவடி பின்பகுதியில் சமூக விரோதிகள், மதுப்பிரியர்கள் மதுஅருந்தும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே மீண்டும் காவலர்களை அமைத்து முறையான சோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick