Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 May 2023 3:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32858

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அரசினர் ஐ.டி.ஐ. எதிரில் உள்ள அம்மன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள், குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, உடனடியாக சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.கே.நசீர் அகமது, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32857

சேதமடைந்த ரேஷன் கடை

சேதமடைந்த ரேஷன் கடைமற்றவை

பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் விழுந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி பொருட்கள் வீணாகுகின்றன. மேலும் பொதுமக்கள் தினமும் அச்சத்தோடு தான் பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ரேஷன் கடையை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்.-மணி, மல்லப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32856

கிணற்றுக்கு கம்பிவேலி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளது பூதநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் சாலையோரம் திறந்த வெளியில் பொது கிணறு உள்ளது. பயன்பாடின்றி உள்ள இந்த கிணற்றின் தடுப்புச்சுவர் மேல் பெரியவர்கள், குழந்தைகள் ஆபத்தான நிலையில் உட்காருகின்றனர். இதனால் தவறி கிணற்றில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கிணற்றை முழுமையாக மூட வேண்டும் அல்லது கம்பி வேலை அமைக்க வேண்டும்.-தங்கராஜ், பூதநத்தம், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32855

நடவடிக்கை தேவை

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புறநகர் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பஸ்கள் அனைத்தும் நகர பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஅள்ளி, அஞ்செட்டி, பெங்களூரு, சென்னை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் நெடுஞ்சாலையின் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கல்குவாரி லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை நகருக்குள் வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32854

வெயிலில் வாடும் மக்கள்

வெயிலில் வாடும் மக்கள்மற்றவை

ஏரியூரில் உள்ள ரேஷன் கடைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பொருட்களை வாங்க வந்து செல்கின்றனர். இந்த ரேஷன் கடையில் நிழற்கூரை இல்லை. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கடும் வெயிலில் நின்றபடி பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனவே வெயிலில் வாடும் மக்களின் நலன் கருதி ரேஷன் கடைக்கு நிழற்கூரைஅமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32853

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4 ரோடு பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, மல்லாபுரம், வெள்ளிச்சந்தை செல்லும் சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க மாரண்டஅள்ளி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 6:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32719

மினி பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் கிராம பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மினி பஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் அவசர தேவைகளுக்கு பஸ்களில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுள்ளனர்.-மோகன், ஓ சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 6:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32718

பேரிகேட் வைக்கலாமே!

போக்குவரத்து

ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோவில் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இங்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோர் அதிக வேகத்துடன் வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அந்த சாலைகளின் மேற்கு புறத்தில் உள்ள தெருக்களுக்கும், பள்ளிக்கும் செல்வோர் சாலையை கடக்க முடிவதில்லை. எனவே விபத்துகளை தடுக்க பேரிகேட் வைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்பிரமணியன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32717

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஒருவந்தூர் காவிரி ஆற்றிலிருந்து வளையபட்டி வழியாக பட்டினம், சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைத்து குடிநீர் செல்கிறது. இந்த நிலையில் செவிட்டுரங்கன்பட்டி பிரிவு ரோடு அருகில் உள்ள குடிநீர் குழாய் சேதம் அடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்ரமணி, வளையப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:58 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32716

சேறும், சகதியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. இதனால் ஆர்.பி. புதூரில் இருந்து சக்தி நகருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32715

ஆபத்தான கழிவுநீர் தொட்டி

கழிவுநீர்

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை நடைபாதையில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூடப்படாமல் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் தவறி இந்த குழியில் விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் தொட்டியை மூட அதிகாரிள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சாகுல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#32714

பெயர் பலகை அமைக்க கோரிக்கை

மற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள தெருக்களில் வார்டு எண்களுடன் தெரு பெயர் இல்லாததால் புதிதாக இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் முகவரி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வார்டில் உள்ள தெருக்களில் பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பக்தவத்சலம், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick