Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 May 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33119

பஸ்கள் இயக்கப்படுமா ?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி அரசு நகர போக்குவரத்து பணிமனையில் இருந்து பர்கூர் கொண்டப்பநாயனபள்ளி, பாகிமானூர் கூட்ரோடு, வழியாக கிருஷ்ணகிரிக்கு இரவு 8 மணி அளவில் நகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 2 ஆண்டுகளக்கு முன் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் இந்த பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-ரவி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33118

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ராமன் தொட்டி கிராமத்தில் இருந்து ஜோடுகொத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. எனவே சேதமான இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33117

கழிப்பிடம் அமைக்க கோரிக்கை

குப்பை

ஒசூர் மாநகராட்சியில் காந்தி ரோடு, நேதாஜி ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொது கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் இந்த கடைகளுக்கு வரும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதிகளில் பொது கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பிரபு, ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32871

விஷப்பூச்சிகள் நடமாட்டம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி-திருச்செங்கோடு சாலையில் கிளை நூலகம் உள்ளது. மேலும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் குவிந்தும், செடி கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அந்த பகுதியில் புதர்களை அகற்றி தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும்.-லோகநாதன், பரமத்தி வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32869

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

பரமத்திவேலூர் திருவள்ளுவர் சாலை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-விநாயகன், பரமத்தி வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32868

வேகத்தடை அவசியம்

சாலை

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளுக்கு அருகில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சர்வீஸ் ரோடுகள் செல்கின்றன. நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் சேலம்-நாமக்கல் ரோட்டில் இருந்து சர்வீஸ் ரோட்டில் பிரிந்து செல்கின்றன. வேகமாக வரும் வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் திடீரென்று பிரிவதால் விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32867

பகலிலும் எரியும் தெருவிளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில் இருந்து ஆரியூர் செல்லும் சாலையில், முத்தூர் பிரிவு ரோடு அருகே மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்த மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. எனவே அந்த தெருவிளக்கு இரவில் மட்டும் எரிய நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜேஸ், எஸ்.வாழவந்தி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32863

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

சேலம் ஊராட்சி ஒன்றியம் எருமாபாளையம் ஊராட்சி 11-வது வார்டு குதிரைபாலி கரடு மெயின்ரோடு பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் மயானம் செல்லும் வழி என்பதால் இறுதி ஊர்வலம் செல்லும்போது வாகனத்தின் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.-கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32862

சாலையில் பள்ளம்

சாலை

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சீலநாயக்கன்பட்டி பைபாஸ் செல்லும் வழியில் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.-சுதர்சனன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#32861

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலை சேதமடைந்த காரணத்தால் குப்பனூர் சாலை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் நேராக ஏற்காடு பஸ் நிலையம் சென்று சுற்றுலா பயணிகளை இறக்கி விடுகின்றன. போட் ஹவுஸ், அண்ணா பார்க், மான் பூங்கா, ஏரி பூங்கா அனைத்தும் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் நடந்து செல்லும் நிலைக்கு உள்ளாகின்றனர். எனவே சேலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஒண்டிக்கடை ரவுண்டானா...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32860

காட்சி பொருளான தண்ணீர்தொட்டி

காட்சி பொருளான தண்ணீர்தொட்டிதண்ணீர்

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டி கிராமம் மூர்த்திபட்டி 10-வது வார்டு மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் அது காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த குடிநீர் தொட்டியில் தினமும் தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?--ரமேஷ், எம்.காளிப்பட்டி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 3:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32859

கரடுமுரடான சாலை

சாலை

ஊத்தங்கரை-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருந்து கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்னாண்டியூர் செல்லும் சாலை வரை சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடான சாலையாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை புதுப்பித்து தார்சாலையாக அமைக்க வேண்டும்.-தீர்த்தகிரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick