Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 May 2023 6:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33131

பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மற்றவை

சேலம் சிவதாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள மைதானத்தில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி விடும். இதனால் பள்ளி மாணவர்கள் விளையாட முடியாமல் நிலை இருந்ததது. தற்போது இந்த மைதானத்தில் மண் கொட்டப்பட்டு பாதி மைதானம் மேடு படுத்தப்பட்டுள்ளன. இன்னும் முழுமையாக மேடுபடுத்தப்பட்டு பள்ளி திறப்பதற்குள்ளாக பள்ளி மாணவர்கள் விளையாடும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சிவா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 6:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33130

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவார்கள். ஆனால் ஏற்காட்டில் லேடீஸ் சீட் சுற்றுலா பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. இதில் பஸ்கள் இயக்கபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே லேடீஸ் சீட் பகுதிக்கு செல்வதை நிறுத்தி மாற்று பாதையில் இயக்கி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அந்தோணிராஜ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 6:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#33129

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலைய பகுதியில் மேட்டூர் திருப்பத்தில் இருந்து காவல் சார்பு ஆய்வாளர் அலுவலகம் வரை சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் கடந்த தைப்பூசம் தேர் திருவிழாவிற்காக தற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 6:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33128

ரெயில் நிலையத்தில் தெருநாய்கள்

மற்றவை

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக தினமும் 65-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ரெயில் நிலையம் நுழைவாயில், டிக்கெட் கவுண்டர் மற்றும் நடைமேடை பகுதிகளில் அதிகமாக தெரு நாய்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் பயணிகள் ரெயில் நிலையத்திற்கு அச்சத்துடன் வந்து செல்கின்றார்கள். எனவே ெரயில்வே நிர்வாகம் இந்த தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:58 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33127

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

வளையப்பட்டியில் இருந்து நாமக்கல் செல்வதற்கு காலை 5.50 முதல் காலை 6.30 மணி வரை எந்த ஒரு பஸ்சும் இல்லை. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபாகரன், வளையப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:57 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33126

சுகாதாரகேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா பாலமேடு ஊராட்சியில் அருந்ததியர் தெருவில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் சீரமைக்காமல் உள்ளனர். சிறியவர் முதல் பெரியவர் வரை இதைத்தாண்டிதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணியை உடனடியாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அன்புமணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33125

கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வெள்ளை பிள்ளையார் கோவில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. ஆஸ்பத்திரி நுழைவுவாயில் அருகே சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளை மாற்றுப் பாதையில் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு போதிய அறிவிப்பு இல்லை. எனவே நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறாமல் திரும்பி செல்கின்றனர். எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சசிகுமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33124

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

நாமக்கலம் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக அந்த கோவில் அருகில் 5 முகப்புகளை கொண்ட உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது அதில் ஒன்று மட்டுமே எரிகிறது. மற்ற முகப்புகள் எரியாமல் இருப்பதால் இருட்டாக காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்கள் போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே எரியாத மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அக்னிதர்மா, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33123

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா ?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஹள்ளி ஊராட்சியில் ரெட்டியூர், வி.செட்டிஏரிபள்ளம், சமத்துவபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் 2 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த பகுதி புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-சதீஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33122

சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு பள்ளியின் பின்புறம் சாக்கடை ஓடுகிறது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளிக்குள் அதிகப்படியான கொசுக்கள் வருவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணிகண்டன், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33121

சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணிய சிவா தெருவில் உள்ள சுகாதார வளாகம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் 5, 7, 8, 9, 12 ஆகிய 5 வார்டுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பிட வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்ததை உடனடியாக திறக்க வே்ண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-நிரஞ்சன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 5:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33120

சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் வெவ்வேறு வழக்குகளுக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் விசாரணைக்காக வரும் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். இந்த வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து இருக்கின்றன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.-தமிழ்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick