Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37601

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. பல நாட்களாக தண்ணீர் செல்வதால் சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும். -ஹேமாவதி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37600

குப்பையால் மாசடையும் தண்ணீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள வெண்டாங்கி கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசடைகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே ஆற்றில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோதண்டராமன், காரவள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 3:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37562

பழுதடைந்த மின்மோட்டார்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பாரதிதாசன் தெருவில் மின் மோட்டார் வசதியுடன் தண்ணீர் தொட்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜசேகர், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 3:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37561

பள்ளிக்கு அடிப்படை வசதி தேவை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முறையான கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் விஷஜந்துக்கள் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 3:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37560

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தின்னகுட்லஅள்ளியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 3:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37559

ஆபத்தான குடிநீர் தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ஜே.ஆர்.நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து அந்த கிராமத்தில் உள்ள 100 வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டியின் 2 தூண்கள் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். -குணா, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 3:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37558

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து சிந்தகம்பள்ளி செல்லும் காரகுப்பம் மேம்பாலம், எமக்கல்நத்தம் செல்லும் மேம்பாலம், பூமலை நகர் செல்லும் மேம்பாலங்களில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த மேம்பாலங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 3:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37557

கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கலாமே!

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு தினமும் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வங்கியில் போதிய கவுண்ட்டர்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் அதிக நேரம் செலவாகிறது. எனவே வாடிக்கையாளர்்கள் நலன்கருதி வங்கியில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும். -சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 3:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37556

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் கே.சி.சி.நகர் சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்சர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37396

புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் திணறல்

மற்றவை

மோகனூரில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரை வழிப்பாலம் அருகே மோகனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் குப்பையை தீ வைப்பதால் அந்தப் பகுதியில் புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி திணறும் நிலை உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலா, மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37395

மலைவாழ் மக்கள் கோரிக்கை

மற்றவை

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் தோட்டக்கலை பண்ணை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள நுழைவுவாயில் பகுதியில் உள்ள சாய்வு நாற்காலி சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு வரும் மலைவாழ் மக்கள் உட்கார முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அங்குள்ள சாய்வு நாற்காலியை சீரமைக்க வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. -சந்திரசேகரன், செம்மேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37394

சாலையை அகலப்படுத்தலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் அளவாய்ப்பட்டி அடுத்த தச்சன்காடு பகுதியில் இருந்து கோம்பைகாடு செல்லும் சாலை சேதமடைந்து இருந்தது. தற்போது புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மலை அடிவாரத்தில் குறுகிய வளைவுகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் திரும்பும்போது விபத்தில் சிக்கி வருகின்றன.. எனவே குறுகிய சாலையை விரிவுபடுத்தி வளைவுகளை நேர் செய்து சாலை அமைக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து சாலையை அகலப்படுத்தி பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick