Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Oct 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | பென்னாகரம்
#41146

மருத்துவ முகாம்கள் நடத்தப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தற்போது அதிகப்படியான பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் அரசு சார்பில் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுமா? -பசுபதி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 5:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#41145

சுற்றுச்சுவர் இல்லாத கிணறு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில் கிணறு உள்ளது. ஆனால் இந்த கிணற்றுக்கு சுற்றுசுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். -வெங்கடேசன், அத்திமுட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 5:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#41144

துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 11-வது வார்டில் சாக்கடை கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்தப்படாமல் பல நாட்களாக சாக்கடை கால்வாய் அருகிலேயே போட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் மழை பெய்தால் மீண்டும் அவை சாக்கடை கால்வாயிலேயே கலக்கும் என்பதால் அதனை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாதிக்பாஷா, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40912

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை தெருக்களில் செல்லும் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்தி வருகின்றன. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். -குரு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40910

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து சவுரிபாளையம் பகுதியில் இருந்து மதியம்பட்டி செல்லும் தார்சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் சிலர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பன்னீர்செல்வம், மதியம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40907

அறிவிப்பு பலகை அவசியம்

சாலை

தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் செலவடை பஸ் நிலையம் அருகே வேகத்தடை உள்ளது. ஆனால் அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தால் நிறைய வாகன ஓட்டிகள் வேகமாக வந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இதனை தடுக்க அறிவிப்பு பலகை அவசியம் வைக்க வேண்டும். -முத்து, ராமிரெட்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40902

ஆபத்தான சாலை

சாலை

சேலம் எருமாபாளையம் ஊராட்சி 12-வது வார்டு பனங்காடு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து பெருமாள் கோவில் கரடு செல்லும் சாலை ஆரம்பத்தில் உயரம் சுமார் 10 அடி மேடாகவும், திடீர் இறக்கமாகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தடுப்புச்சுவர் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க சாலையை சீரமைக்க வேண்டும், மேலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#40901

அடிப்படை வசதி தேவை

மற்றவை

சேலம் அண்ணா நகர் 9-வது வார்டு பகுதி மக்களுக்கு சாலை, தெரு விளக்கு, சாக்கடை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் சாக்கடை நீரும் மழைநீரும் கலந்து செல்கிறது. இதனால் இங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -ராஜா, அண்ணாநகர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#40897

சுகாதார சீர்கேடு

மற்றவை

ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலம்-மேட்டூர் வழித்தட ஓமலூர் பஸ் நிறுத்தத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வுகாண வேண்டும். மேலும் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நிழற்கூடம் அமைத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40875

சுகாதார வளாகம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள சுகாதார வளாகத்தில் உள்ள உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே இந்த கழிவறையை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சாலம்மாள், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40874

கண்காணிப்பு கேமராக்கள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலம் சந்திக்கும் சாலை உள்ளது. இந்த பகுதியில், காவல்துறை சார்பில் போக்குவரத்தை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது செயல்படாமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே இந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40872

சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி சாலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாயில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick