4 Oct 2023 5:49 PM GMT
#41146
மருத்துவ முகாம்கள் நடத்தப்படுமா?
பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தற்போது அதிகப்படியான பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் அரசு சார்பில் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுமா?
-பசுபதி, ஏரியூர்.