Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Oct 2023 3:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#41649

ஆமைவேகத்தில் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு மைய பகுதியில் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாய் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகள ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அரவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#41519

ஆபத்தான நடைமேடை

மற்றவை

சேலம் 5 ரோடு, அழகாபுரத்தில் இருந்து 5 ரோடு செல்லும் சாலையில் சிக்னல் அருகே சாலையையொட்டி பயணிகளின் வசதிக்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது பள்ளம் ஏற்பட்டு இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இந்த ஆபத்தான பள்ளத்தில் சில சமயங்களில் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? -ரமேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#41516

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் ஜங்ஷன் மெயின் ரோடு கல்லூரி பஸ் நிறுத்தம் முதல் கேட் வரை சாலையின் ஓரம் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41513

மரம் அப்புறப்படுத்தப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் மணியனூா் செல்லும் சாலையில் அரசு பள்ளிக்கு அருகே 50 ஆண்டு கால பழமையான மரம் சாலையோரம் சாய்ந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பசுபதி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேந்தமங்கலம்
#41510

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே சேந்தமங்கலம் - புதன் சந்தை பிரதான சாலையில் இருந்து நைனாமலை கோவிலுக்கு பிரிந்து செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணி முடிவடையாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | பாலக்கோடு
#41507

அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி இல்லை. இங்குள்ள பொது சுகாதார வளாகம் எப்போதும் மூடியே உள்ளது. மழைக்காலங்களில் கோவில் வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக சுகாதாரமற்று காணப்படுகிறது. மேலும் கோவில் அருகே உள்ள மின்விளக்கு பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா? -துரை, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#41506

சேறும், சகதியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரில் இருந்து குட்லான அள்ளி செல்லும் சாலை மழை காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகின்றன. இந்த சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், சி.எம் புதூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#41503

துணை சுகாதார வளாகம்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒப்பதவாடி துணை சுகாதார நிலையத்திற்கு கனமூர், பென்னத்தூர், வரமலை குண்டா, பாரத கோவில், வி.கே நகர், ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சுகாதார நிலையம் முன்பு கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சுகாதார வளாகத்தின் முன் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? -பசுபதி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#41500

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர்- பாகலூர் பிரதான சாலையில் இருந்து கே.சி.சி.நகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளதால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவகுமார், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41346

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் நல்லியாம்பாளையம் உள்ளது. இ்ங்கு அருந்ததியர் காலணியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பழனிவேல், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41345

சுகாதாரம் இல்லாத பொதுகழிப்பறை

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த தொட்டிபட்டி செல்லும் சாலையில் பொதுசுகாதார கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை பயன்படுத்த முடியாத வகையில் சுகாதாரம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கழிப்பறையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41344

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. அந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சர்வேஷ்வரன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick