Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Jan 2024 7:04 PM GMT
Mr.Nagarajan | பாலக்கோடு
#43747

தெருவிளக்குகள் வேண்டும்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஅள்ளி ஊராட்சி, மோதுகுல ஊராட்சி பகுதிகளான முருக்கம்பட்டி, அருந்ததியர் காலனி பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் பயத்தால் பெண்கள், முதியவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி முருக்கம்பட்டி, அருந்ததியர் காலனியில் ெதருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது., பெருமாள், அருந்ததியர் காலனி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43746

ஆகாய தாமரை செடிகளை அகற்றப்படுமா?

தண்ணீர்

பாப்பாரப்பட்டி டவுன் பகுதியை ஒட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன. அதன் பின்பு இந்த ஏரியில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் மீண்டும் ஆகாய தாமரை செடிகள் அடர்ந்து வளர தொடங்கியுள்ளன. இதனால் ஏரியில் மழைநீர் தேங்கும் பரப்பு குறைய தொடங்கியுள்ளது. எனவே ஏரியில் அடர்ந்து வளர்ந்து வரும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முனுசாமி, பாப்பாரப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43745

சாலையை சீரமைக்கலாமே!

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய் பணிகள் முடிந்தும், சாலை சீரமைக்கப்படாமல் ஜல்லிகற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டும். - சரவணன், மாரண்டஅள்ளி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 6:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#43744

பஸ்களுக்கு தனி கவுண்ட்டர் தேவை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர்- பெங்களூரு பகுதிகளுக்கு செல்கின்றன. அதேபோல அங்கிருந்து ஏராளமான வாகனங்கள் கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கார்கள் இந்த சுங்கச்சாவடியில் ஒரே நேரத்தில் வருவதால் பஸ்களில் பயணம் செய்ய கூடிய பயணிகளும சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே இந்த சுங்கச்சாடியில்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 6:54 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#43743

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரில் உத்தனப்பள்ளி செல்லும் சாலையிலும், லிட்டில் பிளவர் பள்ளி அருகே பாலத்தின் அடியிலும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பல முறை விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே சூளகிரி நகரில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலும், உத்தனப்பள்ளி சாலையிலும் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - மஞ்சுநாத், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 6:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#43742

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. குப்பைகளை கால்நடைகள் கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டடாமல் அதற்குரிய இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலாஜி, கல்லாவி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43596

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே அனுமதி இல்லாமல் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களும் மற்றும் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய அனுமதி இல்லாமல் வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செந்தில், அத்தனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43592

பாழடைந்த கட்டிடத்தை அகற்ற கோரிக்கை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை துறைக்கு என்று தனியாக கட்டிடம் இருந்தது. பின் இந்த கட்டிடம் சேதமடைந்ததால் பொன்னேரி கைக்காட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சேதமடைந்த கட்டிடம் அப்படியே இருக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தில் மேற்புறம் செடிகள் முளைத்தும் காட்சி அளிக்கிறது. எனவே இந்த பாழடைந்த கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மைக்கேல், எருமப்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 2:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43503

வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் அதிவேகத்தில் உள்ளே நுழையும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் வேகத்தடை இல்லாததால் தாறுமாறாக வளைவில் முந்தி செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர், பெண்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிலையம் நுழைவு பகுதியில் வேகத்தடை மற்றும் நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையம் பகுதி என மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுந்தர், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 2:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43502

விபத்து அபாயம்

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு குறுகிய பகுதியில் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் மாற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழியை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, சிக்க மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 2:35 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#43501

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி பகுதியில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில், காய்கறி மார்க்கெட் முன்பு உள்ள சாலை நீண்ட காலமாக குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கருணா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#43364

இருளில் மூழ்கிய சாலை

மின்சாரம்

சேலம் மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மேயர் தெருவில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. அந்த வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் திருட்டு அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மூர்த்தி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick