Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jan 2024 3:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#44035

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி - ஓசூருக்கு பணி நிமித்தமாக நாள்தோறும் காலையில் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். இதனால் காலை நேரத்தில் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக காலை 9 மணி வரையில் ஓசூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் அதிக அளவில் கூட்டமாக செல்கின்றன. எனவே காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 3:47 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#44034

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

ஓசூர் - பெங்களூரு பழைய சாலையில் பிரபல துணிக்கடை எதிரில் இருந்து வாசவி நகர் செல்லும் சாலையில் வங்கிகள், வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. இங்குள்ள சாலை, குறுகலாகவும், நீண்ட காலமாக குண்டும், குழியுமாகவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டமும், இருசக்கர மற்றும் கார், வேன் போன்ற வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக இருந்து வருகிறது. எனவே, மிகவும் மோசமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 3:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#44033

குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லாபுரம் செல்லும் சாலையில் பட்டாளம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரில் நீண்ட நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இந்த பகுதியில் கல்லூரி, பள்ளி வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலை என்பதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 3:36 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#44031

பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சோமனஅள்ளி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் உள்ளது. இந்த எந்திரம் பழுதடைந்து பல மாதங்கள் ஆகி விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதால் பொதுமக்களுக்கு உடல்நல கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் எந்திரத்தை சரிசெய்து தரவேண்டும். -பொதுமக்கள், சோமனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43902

தாமதமாகும் பணி

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக மின் மயானம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. பணிகள் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் முடிக்கப்படவில்லை. எனவே இந்த மயானம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43901

தடுப்பு சுவர் அமைக்கலாமே !

மற்றவை

நாமக்கல் கொசவம்பட்டி ஏரியையொட்டி ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. இங்கு செல்ல கொசவம்பட்டி ஏரிக்கரையில் இருந்து புதிதாக தார்சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலையையொட்டி கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் ரெயில் நிலையத்திற்கு செல்வோர் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தடுப்புசுவர் ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுகுமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#43753

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

தாரமங்கலம் பஸ் நிலைய சாலையானது அங்குள்ள தனியார் பள்ளி வரை உள்ளது. இந்த சாலையில் 5 வேகத்தடைகள் உள்ளன. ஆனால் இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் அதில் வாகனம் ஏறி இறங்கும்போது தவறி கீழே விழுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். -சின்னண்ணன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:22 PM GMT
Mr.Nagarajan | சங்ககிரி
#43752

சாலை வசதி

சாலை

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ளது பண்டிதகாரனூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மழைக்காலங்களில் இந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு தார்சாலை அமைத்து தரவேண்டும். -சரத்குமார், பண்டிதகாரனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#43751

தாழ்வாக செல்லும் மின்ஒயர்

மின்சாரம்

தாரமங்கலம் 16-வது வார்டு மோட்டுப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள மின்கம்பத்தின் உள்ள ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் ஒயர்கள் உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின் ஒயரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கராஜி, மோட்டுப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43750

தாமதமாகும் மேம்பால பணி

போக்குவரத்து

பள்ளிபாளையத்தில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் ஆங்காங்கே பள்ளம் தோண்டபட்டு உள்ளதால் சாலை குறுகி காணப்படுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலைய ரோட்டில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாமதமாகும் மேம்பால...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43749

தெரு நாய்கள் தொல்லை

மற்றவை

ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி மற்றும்அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெருநாய்கள் கடித்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றன. இதனால் அந்த பகுதி மக்கள் ஒரு வித பயத்துடன் நடமாட வேண்டியுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் தெருநாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்புநிதி, முள்ளுக்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 7:09 PM GMT
Mr.Nagarajan | சேந்தமங்கலம்
#43748

‘தினத்தந்தி’க்கு பாராட்டு

மற்றவை

சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வளைவில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த 4-ந் தேதி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சீரமைத்தனர். இதனால் தற்போது வாகன ஓட்டிகள் அப்பகுதியில் அச்சமின்றி சென்று வருகின்றனர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். -சோமு, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick