Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Feb 2024 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44619

சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பு

கழிவுநீர்

பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் சாயக்கழிவுநீர் இரவு நேரங்களில் திறந்து விடப்படுகிறது. இதனால் கால்வாயில் நுரை பொங்குவதுடன், தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த சாய கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நீரைதான் மக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே சாய கழிவுநீர் கால்வாயில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆதவன், ஆவத்திபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#44616

கழிவறை திறக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி, சேலம், பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகிறது. இப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பொம்மிடி பஸ் நிலையத்திற்கு வந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு, வந்து செல்லும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. மாற்றுத்திறனாளிக்கான கழிவறை பூட்டப்பட்டு உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கழிவறை செல்ல முடியாமல் அவதியடைந்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:15 PM GMT
Mr.Nagarajan | பாலக்கோடு
#44614

கட்டுமான பொருட்களை அகற்றலாமே

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் பஸ் நிலையம் கட்ட பயன்படுத்தி மீதி இருந்த கட்டுமான தளவாட பொருட்கள் அப்புறப்படுத்தபடாமல் அப்படியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:05 PM GMT
Mr.Nagarajan | ஊத்தங்கரை
#44597

சுகாதார வளாகம் புதுப்பிக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்குப்பம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. தண்ணீர், மின்சாரம் வசதி இல்லை. இதனால் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஊராட்சியில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், ஊத்தங்கரை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:02 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#44591

கிரானைட் கழிவுகளால் மாணவிகள் அவதி

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,100 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் கிரானைட் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் காற்று வீசும்போது கிரானைட் கழிவுகள் தூகல்களாக பறக்கிறது. இவை மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே விளையாட்டு மைதானத்தில் கொட்டப்படும் கிரானைட் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதா, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44412

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன், சாலையும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா ? -ராஜபாண்டியன், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44410

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து மதியம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மதியம்பட்டி ஏரியில் இருந்து சவுரிபாளையம் வரும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிலசமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சக்திவேல், மதியம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#44408

பஸ்கள் ஊருக்குள் வந்து செல்லுமா ?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் வனவாசியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு-வனவாசி, ஜலகண்டாபுரம்-மேட்டூர் செல்லும் பஸ்கள் வனவாசி ஊருக்குள் வருவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் சேலத்தில் இருந்து வனவாசிக்கு வருவதற்கு பஸ் வசதி இல்லை. எனவே பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சதீஷ்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#44407

விபத்து அபாயம்

சாலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி-தம்மம்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் சாக்கடை கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியே வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே ஆபத்தான இந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்தோஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 4:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#44384

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

பர்கூர் அடுத்த அம்மெரி அருகே கிருஷ்ணகிரி- சென்னை புறவழிச் சாலையின் உயர்மட்ட மேம்பாலத்தின் உட்புறத்தில் உள்ள சாலையில் காரகுப்பம், கொள்ளப்பள்ளி, பசவண்ண கோவில் வழியாக கிருஷ்ணகிரிக்கும், ஆந்திர மாநிலம் குப்பத்திற்கும் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மேம்பாலத்தின் உட்புறத்தில் உள்ள விளக்குகள் ஒரு வருடத்திற்கு மேலாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருண்டு கிடக்கிறது. அடிக்கடி விபத்துகளும், குற்றச் சம்பவங்களும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#44383

பழுதான குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தர்மன், அத்திமூட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 4:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#44382

குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்கப்படுமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் மடுவு அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவாயிலில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் போடப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அப்படியே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களும், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பைகளை வைத்து எரிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனிசாமி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick