11 Feb 2024 5:16 PM GMT
#44408
பஸ்கள் ஊருக்குள் வந்து செல்லுமா ?
சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் வனவாசியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு-வனவாசி, ஜலகண்டாபுரம்-மேட்டூர் செல்லும் பஸ்கள் வனவாசி ஊருக்குள் வருவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் சேலத்தில் இருந்து வனவாசிக்கு வருவதற்கு பஸ் வசதி இல்லை. எனவே பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சதீஷ்குமார், சேலம்.