Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Feb 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26765

பயன்படாத மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- திருப்பத்தூர் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு அருகே செல்லும் மரக்கிளைகள் மறைத்து கொண்டு இருப்பதால் இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சம் போதிய அளவு இல்லை. இதனால் மின்விளக்கு எரிந்தும் பயன் இல்லாமல் உள்ளது. அந்த வழியே செல்லும் பொதுமக்களும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#26578

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

சேலம் அம்மாபேட்டை 33-வது வார்டு தம்பி காளியம்மன் தெருவில் மின்கம்பம் சேதமடைந்து கீழே விழுகிற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரத்தினம் விஸ்வா, அம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#26577

சாலை அமைக்க வேண்டும்

சாலை

சேலம் தாதகாப்பட்டி 55-வது வார்டுக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஓராண்டுக்கு மேலாகியும் சாலை அமைத்து தரப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மணிகண்டன், தாதகாப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26576

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியான சேலத்தில் இருந்த தாரமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து கணபதி நகர், பொன் நகர், ஓம் சக்தி நகர் செல்ல இணைப்பு சாலை அமைத்து பல வருடங்கள் ஆகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கண்ணன், இரும்பாலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26575

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் எடப்பாடி தங்காயூர் கிராமத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு காலை 9 மணிக்கு ஒரு பஸ் மட்டுமே செல்கிறது. கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-புவனேஷ்வரி, எடப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26573

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து வெள்ளப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த 6 மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். இந்த நிலையில் மீண்டும் அந்த இடங்களில் ஆக்கிரமித்துள்ளனர். எனவே நெடுஞ்சாலைத் துறையினர் கவனத்தில் கொண்டு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ஈஸ்வரமூர்த்தி, அளவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26572

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் குரும்பபட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் குடிநீர் குழாய் உள்ளது. அந்த குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாக பாலத்திற்கு அடியில் வந்து குரும்ப்பட்டி செல்லும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் குரும்பப்பட்டி செல்லும் சாலையில் செல்பவர்கள் தண்ணீரில் வழுக்கி விழும் நிலை உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாண்டியன், வலையபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26571

கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா ?

சாலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை கரடு முரடாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அவர்கள் எளிதாக செல்லும் வகையில் அங்கு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சேகர், கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26536

வேகத்தடை அமைக்கப்படுமா ?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தர்மபுரி- திருப்பத்தூர் 2 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை போச்சம்பள்ளி பஸ் நிலையத்தை ஒட்டி செல்கிறது. போச்சம்பள்ளியில் உள்ள தாலுகா அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, ரேஷன் கடைகளுக்கு செல்ல பொது மக்கள் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும். ஆனால் அங்கு வேகத்தடை மற்றும் சாலையை கடக்கும் வெள்ளை கோடுகள் இல்லை. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை மற்றும் சாலையை கடக்கும் வெள்ளை கோடுகள் வரைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-ஆறுமுகம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26535

ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்பேட்டைக்கு செல்லும் வழியில் மிகவும் பழமையான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து ஏரிநீர் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பரவி கிடக்கிறது. மேலும் ஏரி நீர் மாசடைந்த வருகிறது. எனவே அந்த ஆகாயத்தாமரை செடிகளை முழுவதுமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன், ஓசூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26533

பயன்பாட்டுக்கு வருமா? சிறுவர் பூங்கா

பூங்கா

ஒசூர் மாநகராட்சி அன்னைநகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த சிறுவர் பூங்கா முட்புதர்கள் சூழ்ந்து பயன் இல்லாமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட இடமில்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-அனு, ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26532

சேதமடைந்த கழிப்பிடம்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் கிராமத்தில் இலவச மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிட கட்டிடம் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-துரை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick