Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Feb 2023 5:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26786

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

குப்பை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி வியாழக்கிழமை வாரச்சந்தை அருகில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. அதன் உட்புறத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. அதில் விஷபூச்சிகள் தங்கிவிட வாய்ப்புள்ளது. இதனால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு அவைகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.-சரசு, காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:51 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#26784

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் அருகே இரும்பாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி பஸ் நிறுத்த பகுதியில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் வேகமாக செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர் என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அங்கு வேகத்தடை அமைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-கோவிந்தசாமி, இரும்பாலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#26783

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தாலுகா குரால்நத்தம் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும்.-கவுரிசங்கரி, குரால்நத்தம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#26782

உயர்மட்ட நடைபாதை சீரைமக்கப்படுமா?

மற்றவை

சேலம் பழைய சூரமங்கலம் கூட்செட் பகுதியில் பழைய சூரமங்கலம்-சூரமங்கலம் இடையே உள்ள தண்டவாள பாதையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ெரயில்வே உயர்மட்ட நடைபாதை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. தற்போது இந்த நடைமேடை சேதமடைந்துள்ளதால் அந்த வழி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் ெரயில் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் அவதியடைகின்றனர். எனவே இந்த உயர்மட்ட நடைபாதையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரமேஷ், அரியாக்கவுண்டம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26781

குப்பைகளால் சுகாதார கேடு

குப்பை

சேலம் மாவட்டம் பாகல்பட்டி பஞ்சாயத்து ஓம்சக்தி நகர் பகுதியில் சாலை ஓரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு வசிக்கும் பொது மக்கள் வெளியே செல்லும் போது மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாாடிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கோவிந்தசாமி, பாகல்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26774

சுகாதார வளாகம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சி தம்மனம்பட்டி கிராமத்தில் சுகாதார வளாகம் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பூட்டி வைத்துள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சந்தோஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26773

தார் சாலை அமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முனியப்பன் கோவில் தெருவில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாக்கன்கொட்டாய் கிராமத்தில் இருந்து முனியப்பன் கோவில் தெரு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மண் சாலையாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு தார்ச்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தள்ளனர்.-மகேஸ்வரி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26771

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் பஸ் நிலையம், 4 ரோடு, ராக்கம்மாபேட்டை, தர்மபுரி -சேலம் ரோடு, போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் பகல் இரவு நேரங்களில் சுற்றி வருகிறது. இவை சாலைகளில் செல்லும் பொது மக்களை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பாரதிராஜா, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26770

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கூட்ரோடு பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கணேசன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26769

சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த பேரிகை செல்லும் சாலையில் கொத்தகிருஷ்ணபள்ளி, நேரலகிரி, பண்ணப்பள்ளி மற்றும் பல இடங்களில் சாலையில் சில பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. பின்பு சாலையை முறையாக மூடாமல் விட்டுவிட்டனர். தற்போது இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே உடனடியாக இந்த குழிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26767

பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் சாலை விரிவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வாரம் தீவிரமாக நடைபெற்ற பணி பின்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பஸ் நிலையத்தில் குழி தோண்டப்பட்டு மண் குவியல் மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதியல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடடிவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதேஸ்வரன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26766

குப்பைகளால் சுகாதார கேடு

குப்பை

ஒசூர் மாநகராட்சி விகாஸ்நகர் அருகே பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். கோழி மற்றும் இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்றி அங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?-செல்வி, ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick