Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 March 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28239

குப்பகைளை அகற்ற வேண்டும்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி சாலையில் அந்திவாடியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் விளையாடவும், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மைதானத்தின் பின்புறம் புதர்களுக்கு மத்தியில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை நாள்தோறும் அகற்றி அந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மல்லேஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28238

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிமெண்டு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28236

பயணிகள் நிழற்குடை அமைக்கலாமே!

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகராட்சி காந்தி ரோடு பகுதியில் கந்திகுப்பம், பர்கூர், காவேரிப்பட்டினம் பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நின்று செல்கின்றன. இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை நீண்ட நாட்களாக இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதிக்கு வரும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சபரீஸ்வரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28058

அகற்ற வேண்டிய சீமை கருவேல மரங்கள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி ஏரி சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் முற்றிலும் சீமை கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-செந்தில், நடுப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28057

உடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்த காவிரி குடிநீர் குழாயை சரி செய்தனர். அந்த உடைந்த குழாயை சாலையின் ஓரமாகவே போட்டு விட்டு சென்றுவிட்டனர். இதனால் அவ்வப்போது அப்பகுதியில் சில விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த உடைந்த குடிநீர் குழாயை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கோகுல், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28056

மயில்களை பாதுகாக்க கோரிக்கை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சுற்றி விவசாய நிலங்கள் அதிக அளவில் காணப்படுவதால் அங்கு இரை தேடி மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது. கடந்த சில தினங்களாக ஒரு பெண் மயில் சேந்தமங்கலம் மெயின் ரோடு பகுதியில் சுற்றி திரிகிறது. அது பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் மயில்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே நகர்ப்பகுதியில் தேசிய பறவையான மயில்கள் நுழைவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயில்களை பாதுகாக்க வேண்டும்.-பிரகாஷ் சூர்யா, சேந்தமங்கலம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28054

நோய் பரவும் அபாயம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பட்டணம் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மழை காலங்களில் தண்ணீர் வரும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பியது. ஏரி தண்ணீரில் குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டுப்படுவதால் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரி தண்ணீரில் குப்பைகள், கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணியன், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#28052

சாக்கடை கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் கபிலர் தெருவில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளின் அருகே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-பாரதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#28051

ஆபத்தான கம்பி

மின்சாரம்

சேலத்தில் காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலில் உள்ள கேட் பகுதியில் இரும்பு கம்பி பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால இந்த நுழைவு வாயிலை கடந்து செல்லும் போது பொது மக்கள் தடுக்கி கீழே விழுந்து அடிபடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர்ந்த இரும்பு கம்பியை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-குருபாலன், மஜ்ரா கொல்லப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#28050

சாலையில் பள்ளம்

சாலை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு வரையுள்ள சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்கள் உள்ளன. வாகனங்கள் ஒன்றுக்கு பின்னால் ஒன்று செல்லும் போது இருசக்கர வாகனங்கள் அந்த பள்ளங்களில் சிக்கி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே முக்கியமான இந்த சாலையில் பள்ளங்களை சீரமைத்து நல்ல தரமான சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சஞ்சய், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28048

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் 6-வது வார்டு ராம்நகரில் சாலை அமைக்கும் பணியின் போது அங்கு உள்ள பழுதான தொலைபேசி கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்க ஜல்லிகற்கள் போடப்பட்டன. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு சாலை போடப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-சேகர், ராம்நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28044

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் கே.சி.சி. நகரில் இருந்து வைகை நகர், ஆனந்த நகர், சின்ன எலசகிரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்துசாமி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick