Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 March 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28269

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழியில் கட்டனாச்சம்பட்டி கிராம சாலையும், புதுப்பாளையம் சாலையும் இணையும் இடத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களிலும் இந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நக்கீரன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28268

பாலத்தில் தேங்கிய மணல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது பழைய பாலம் ஒன்றும், புதிய பாலம் ஒன்றும் உள்ளது. இந்த 2 பாலங்களின் ஓரங்களிலும் மணல் குவிந்து பாலம் முழுவதும் இருக்கிறது. இதனால் பாலத்தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கும்போது மணல் சறுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து மணலை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரமேஷ், பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28266

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் செல்லும் தனியார் பஸ்சில் பயணிகள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் பயணிகள் கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் படிகட்டுகளில் பயணம் செல்வோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மூர்த்தி, பேளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28264

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் புதுபாலம் அருகே சேலம் மெயின் ரோடு உள்ளது. அந்த சாலையில் கீழ் மேட்டூர், சேலம் செல்பவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கோபிநாத், மேட்டூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28262

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி மெயின்ரோடு மேச்சேரியில் புதியதாக அமைந்துள்ள சிறுவர் பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை அதிகாரிகள் தற்போது இந்த பூங்காவை திறந்து வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.-சுந்தரராஜன், சேலம்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28260

ஆபத்தான நிலையில் புளியமரம்

மற்றவை

சேலம் மாவட்டம் வீரபாண்டி தாலுகா உத்தமசோழபுரம் 2-வது வார்டு மலங்காடு செல்லும் பாதையில் பழைய புளியமரம் பாதி முறிந்து ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திடீரென கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஆபத்தான இந்த புளிய மரத்தை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-முத்துசாமி, உத்தமசோழபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28258

குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் சங்ககிரி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே தரைவழி பாலம் குறுகலாக உள்ளதால் ஒருவழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் குறுகிய பாலத்தால் கனரக வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே தரைவழி பால பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பரமேஸ்வரன், சங்ககிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28249

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரிப்பள்ளி கிராமத்தில் பயணிகள் நிழற்கூடத்தை ஆக்கிரமித்து பூக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு பூக்கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பழனிவேல், நரிப்பள்ளி. தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28248

உடைந்த தரைப்பாலம்

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அவுசிங் போர்டு குடியிருப்பு காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் பாதி உடைந்த நிலையில் காணப்படுகிறது. மீதி உள்ள தரைப்பாலமும் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நடந்து செல்லும் போது பாலம் உடைந்து விழுந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த தரைபாலத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28246

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கூட் ரோட்டில் பாப்பாரப்பட்டி, தர்மபுரிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 மாத காலத்திற்கு மேலாக குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இது சம்பந்தமாக பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-துரை, மாரண்டஅள்ளி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28243

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையம் வர்ண தீர்த்தம் முருகர் கோவில் தெரு, கே.கே. நகர், தில்லை நகர், 4 ரோடு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்கள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிரி, அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28242

பூங்காக்கள் பராமரிக்கப்படுமா?

பூங்கா

ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி மாரியம்மன் கோவில் அருகே பூங்கா மற்றும் தனியார் லேஅவுட்களில் உள்ள சிறுவர் பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. பூங்காக்களில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. எனவே பூங்காக்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கார்த்திக், ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick