Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 March 2023 6:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28714

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அளவாய்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள மயானத்தில் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெருநாய்கள் கோழிக்கழிவுகளை எடுத்து வந்து வீதிகளில் வைத்து சாப்பிடுகின்றன. இதனால் பல தொற்று வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரோசிதா, அளவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 5:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28713

தெருவிளக்கு ஒளிருமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு பகுதிகளில் சாலையோரம் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வழியாக இரவு நேரங்களில் செல்வோர் சிரமத்துள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள தெரு விளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுமதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 5:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28712

நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஆர்.நகர் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் அடர்ந்து பாழடைந்து காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் சாலையோரம் பஸ்சுக்காக காத்து கிடக்கின்றனர். எனவே பாழடைந்து கிடக்கும் இந்த நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும்.-சுப்பிரமணி, கண்ணண்டஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 5:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28711

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் தேர்பேட்டை அரசு குடியிருப்பு பகுதிக்கு பின்புறம், சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் சாலை குறுகலாக உள்ளதால் திடீரென இறக்கத்தில் வாகனங்கள் வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 5:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28710

மண்ணில் புதைந்த ஆழ்துளை கிணறு

தண்ணீர்

தா்மபுரி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பழுதடைந்தது. அதனை நீண்ட நாட்களாக சரி செய்யாமல் விட்டதால் தற்போது மண்ணோடு மண்ணாக புதையுண்டு கிடக்கிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணற்றை சீரமைத்து தர வேண்டும்.-சாமி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 5:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28709

போக்குவரத்து பாதிப்பு

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஏரியூரின் மையப்பகுதியில் தார்சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக இந்நிலை தொடர்வதால் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து பாதிப்பால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.-கார்த்திக், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 5:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28708

அரசு கல்லூரியில் குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி வளாகத்தில்குடிநீர் வசதி, வகுப்பறைகள், கழிவறைகள் போதிய அளவில் இல்லை. புளோரைடு கலந்த உப்பு தண்ணீரை தான் மாணவர்கள் குடித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் ஒகேனக்கல் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்காக பரிதவிக்கும்அவல நிலை உள்ளது. எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திவ்யபாரதி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28701

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார்சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மூட்லுவில் இருந்து அகரம் செல்லும் தார்சாலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனால் தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோவிந்தராஜ், அத்தி மூட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28496

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா 33-வார்டுக்கு உட்பட்ட கோழிக்கால் நத்தம் ரோட்டில் அமைந்துள்ள மயானத்தில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த மயானத்திற்கு வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன், திருச்செங்கோடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28495

போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியாக காரவள்ளி விளங்குகிறது. அங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதிக்கு 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் அடிவார பகுதியில் திடீரென்று தோன்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புறகாவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. போலீசார் அங்குள்ள வாடகை கடைகளில் அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். எனவேஅந்த பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28493

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி ஊராட்சி எல்லையில் மேட்டுப்பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை அறப்புலீஸ்வரர் கோவிலுக்கு மலைவாழ் மக்கள், தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதியில் இருந்து பொது மக்கள் அதிகளவில் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்ல முள்ளுக்குறிச்சி எல்லையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் தற்போது சேதமடைந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28492

பழுதான மின்மோட்டார்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் பேட்டைப்பாளையம் ஊராட்சி கீழப்பேட்டைபாளையத்தில் பெண்கள் பொதுகழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறைக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. தண்ணீர் இல்லாததால் இந்த கழிப்பறை பயன் இல்லாமல் கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பழுதடைந்த மின்மோட்டாரை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரிஷி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick