Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2024 7:47 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49716

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி

மற்றவை

காவேரிப்பட்டணம் ஒன்றியம் எர்ரஅள்ளி ஊராட்சியில் 12-வது வார்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா? -எம்.ஆர்.ரகுபதி, எர்ரஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:40 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49715

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக வாணியர் தெருவில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. வாணியர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து அச்சத்துடனேயே வெளியே செல்கின்றனர். இந்த பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் 7-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -மாதப்பன், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 6:08 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#49577

கொசு மருந்து தெளிக்க வேண்டும்

கழிவுநீர்

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் உள்ள பொது கழிவறை மற்றும் சாக்கடை கால்வாய்களில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். தற்போது பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில் சுகாதார துறை அதிகாரிகள் உடனடியாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு மருந்து தெளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 6:07 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#49575

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பிரிவில் உள்ள வர்மா சிட்டியில் இருந்து காந்தி ரோடு வரை ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் அந்த வழியாக செல்லும் மாணவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியவில்லை. அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜூ, மன்னார்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 6:05 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#49570

ஆண்களுக்கு சுகாதார வளாகம்

மற்றவை

தாரமங்கலம் நகராட்சி 23-வது வார்டில் ஆறுபடை நகர், சண்முகா நகர், மகாத்மா காந்தி வீதி, முதியோர் இல்லம் லைன்தெரு, தங்கசாலை வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர்கள் இயற்கை உபாதைக்காக வெளியே செல்ல சிரமப்படுகிறார்கள். கழிவறை இல்லாததால் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். ஆண்களுக்கு என்று இந்த பகுதியில் தனியாக சுகாதார வளாகம் இல்லை. மேலும் அங்கு சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என மனு கொடுத்தும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:49 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#49548

விபத்தை தடுக்க பேரிகாடு அவசியம்

சாலை

ராசிபுரம் டவுன் நாமக்கல் சாலையில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. அது மட்டுமல்லாமல் திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பஸ்கள், லாரிகள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அதிவேகத்தில் செல்கின்றனர்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:46 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#49546

அறிவிப்பு பலகை அமைக்கலாமே!

மற்றவை

ராசிபுரத்தில் இருந்து காக்காவேரி செல்லும் வழியில் வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதியில் பஸ்கள் மிக வேகமாக வருவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் சாலையின் எதிர்எதிர் வழித்தடத்தில் அறிவிப்பு பலகையும், வேகத்தடையும் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:44 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49544

மின்விளக்குகள் பொருத்த வேண்டும்

மின்சாரம்

கந்தம்பாளையம் அருகே உள்ள ராமதேவம் ஊராட்சிக்குட்பட்ட செட்டியாம்பாளையம் 4 ரோட்டில் அருகே கருப்பண்ண சாமி கோவில், அரசு உயர்நிலைப்பள்ளி, ராமதேவஊராட்சி மன்ற அலுவலகம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம் என அனைத்தும் பிரதான சாலையோரம் அமைந்துள்ளது. இந்த 4 பிரிவு சாலையில் ராமதேவம், கோலாரம், தொட்டியம் தோட்டம், கவுண்டிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் காலை முதல் இரவு வரை போக்குவரத்துக்கு இப்பகுதி மக்கள் பிரதான சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்விளக்குகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:42 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49543

குண்டும், குழியுமான சாலை

சாலை

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த வழியாக புதுக்கோட்டை மற்றும் காளிசெட்டிபட்டியில் இருந்து மாணவ, மாணவிகள் பொட்டிரெட்டிப்பட்டியில் செயல்படும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைத்து பொது மக்களின்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:33 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#49539

குப்பைகளால் மாணவ, மாணவிகள் அவதி

குப்பை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கல்விபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகே சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் அந்த குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதப்பன்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:32 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49538

ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கும் சாலை

சாலை

மொரப்பூர் ஒன்றியம் நவலை அருகே செங்குட்டைமேடு முதல் பெரமாண்டப்பட்டி வரை தார்சாலை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலையில் தற்போது ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் இந்த சாலையில் சிறுசிறு விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவி சங்கர், நவலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:30 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#49537

புளியமரம் அப்புறப்படுத்தப்படுமா?

சாலை

மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சாலையோரம் மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் உள்ளது. இந்த மரமானது வேர், கிளைகள் பலமிழந்து, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதனருகே மின்கம்பம், வணிக நிறுவனங்கள் உள்ளதுடன், அவ்வழியாக ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் இனி வரும் காலம் மழைக்காலம் என்பதால் விபத்து ஏற்படும் முன் பழமை வாய்ந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்ரமணி, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick