Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Feb 2025 4:14 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#53505

அடிக்கடி விபத்துகள்

சாலை

ராசிபுரம், காட்டூர், சந்திரசேகரபுரம் செல்லும் வழியில் உள்ள சாலையின் வளைவில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும். -புவனேஸ்வரன், காட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 1:06 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53428

எரியாத மின்விளக்குகள்

மற்றவை

தர்மபுரி நகரில் சேலம் சாலையில் மைய தடுப்பு பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கணிசமான விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த சாலையில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் இரவு நேரத்தில் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகண்டன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 1:05 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#53426

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

பென்னாகரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சி பூதிநத்தம் முதல் சக்கிலிநத்தம் கிராமம் வரை செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அவசர தேவைக்கு கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை புதுப்பிக்கலாமே. -ரங்கா, பெரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 1:04 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#53425

சாலையோரம் ஆபத்தான கிணறு

மற்றவை

ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் மடம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலை வளைவில் கிணறு உள்ளது. இந்த பகுதியில் கிணறு இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வருவோர் கிணறு இருப்பது தெரியாமல் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு சாலையோரம் உள்ள ஆபத்தான கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கலாமே. -பழனிசாமி, மடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 1:03 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#53424

நீர் நிலைகளில் கட்டிட கழிவுகள்

மற்றவை

மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடி பகுதியில், ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலையின் குறுக்கே உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் ஓடை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேங்காமல் வறண்டு விடுகிறது. இதன் காரணமாக அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே நீர் நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வே்ணடும். -மாயக்கண்ணன், கவுண்டனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 1:02 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#53423

குண்டும், குழியுமான தார்சாலை

சாலை

ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி செல்லும் தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஏரியூர் முதல் சிடுவம்பட்டி வரை உள்ள தார்சாலையை சீரமைப்பார்களா? -சம்பத், சிடுமனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 1:01 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53422

சாலையில் ஓடும் சாக்கடை நீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையில் பல இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளில் சாக்கடை நீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -பாபு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 1:00 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#53421

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை பகுதிகளில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் லாரிகள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்தை சீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 12:59 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53420

பராமரிப்பு இல்லாத பஸ் நிலையம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை பலரும் கழித்து செல்கிறார்கள். இதனால் பஸ் நிலைய பகுதி துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக பஸ் நிலைய பகுதிகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் பலவும் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அதிகாரிகள் இதை கண்காணித்து தின்பண்டங்களை சுகாதார முறையில் தயாரித்து விற்பனை செய்திடவும், பஸ் நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 12:58 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#53419

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

மத்திகிரி கூட்டு ரோட்டில் இருந்து அந்திவாடி செல்லும் சாலையில் மிடுகரப்பள்ளி உள்ளது. இந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் 100 அடி சாலையில் மத்திகிரி கூட்டு ரோட்டில் இருந்து மிடுகரப்பள்ளிக்கு திரும்பும் போது முதியவர்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன்பு உடனடியாக இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். -விமல்குமார், மிடுகரப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 12:57 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#53418

பயணிகள் நிழற்கூடம் தேவை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கிருஷ்ணகிரி, ஓசூர் செல்ல எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். இதனால் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வெயிலில் நிற்கிறார்கள். மழைக்காலங்களில் சொல்லவே தேவையில்லை. எனவே பஸ் பயணிகளின் நலன் கருதி மத்தூரில் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும். -சகுந்தலா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 5:27 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#53295

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு செல்லும் வழியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதனால் அப்பகுதி வழியே செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். தெருநாய்கள் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களின் குறுக்கே புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனா். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -மகேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick