Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Dec 2022 8:53 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#23036

சாலையில் வீணாகும் குடிநீர்

சாலையில் வீணாகும் குடிநீர்தண்ணீர்

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முன்பு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 8:51 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#23035

தொற்றுநோய் பரவும் அபாயம்

தொற்றுநோய் பரவும் அபாயம்கழிவுநீர்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ராமன்புதூர் மணிவிலாஸ் 2-ம் தெருவில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையை முறையாக தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும். மணி, நாகர்கோவில்.97883 12225

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2022 4:25 PM GMT
Mr.Dharmaraj | பத்மனாபபுரம்
#19069

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் செல்வோரை கடிக்க முயற்சிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜூ, திக்கணங்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:22 AM GMT
Mr.Dharmaraj | கிள்ளியூர்
#15418

சேதமடைந்த பள்ளி கட்டிடம்

சேதமடைந்த பள்ளி கட்டிடம்மற்றவை

அடைக்காகுழி அரசு நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியின் காங்கிரீட் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் படிப்பைத்தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய்ந்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். -ரெஜி, அடைக்காகுழி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:20 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#15417

கழிவறையில் தண்ணீர் இல்லை

தண்ணீர்

தோவாளை தாலுகா அருமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருமநல்லூர் இந்திரா படித்துறை அருகே பெண்களுக்கான பொது கழிவறை உள்ளது. இங்கு பல மாதங்களாக தண்ணீர் வருவதில்லை. இதனால் இதை ெபாதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பொது இடங்களை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கழிவறையில் போதிய தண்ணீர் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வி.மகாராஜன், அருமநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:19 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#15416

சாலையில் வீணாகும் குடிநீர்

சாலையில் வீணாகும் குடிநீர்தண்ணீர்

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் சாஸ்தா கோவில் அருகே சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து செல்கிறது. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுப்பிரமணியன், வடிவீஸ்வரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:17 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#15414

தற்காலிக பாலத்தை அகற்ற வேண்டும்

தற்காலிக பாலத்தை அகற்ற வேண்டும்தண்ணீர்

தாழக்குடி பேரூராட்சி சந்தவிளையில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பணி நடைபெற்ற போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய தற்காலிக பாலத்தை இதுவரை அகற்றவில்லை. இந்த பாலத்தின் மேல்பகுதியில் ஆற்றில் வெள்ளம் தேங்கி நின்று அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகும் நிலை உள்ளது. இதனால், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதமடையும் அபாய ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:15 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#15413

நடவடிக்கை எடுக்கப்பட்டது

நடவடிக்கை எடுக்கப்பட்டதுமின்சாரம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை கால்வாய் கரையில் உள்ள கம்பத்தில் மின் விளக்குக்காக 'சுவிட்ச்' பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இது திறந்த நிலையிலும், தாழ்வாகவும் காணப்பட்டது. அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் பெட்டியில் கைகளை வைத்து விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சுவிட்ச் பெட்டியை அகற்றிவிட்டு புதிய பெட்டி அமைத்தனர். செய்தி ெவளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 1:58 PM GMT
Mr.Dharmaraj | குளச்சல்
#13367

குடிநீர் வினியோகம் தேவை

தண்ணீர்

நுள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழி ஊரில் இரண்டு வாரங்கள் சரியாக வீடுகளுக்கு தண்ணீர் வரவில்லை வெயில் நேரங்களில் தான் தண்ணீர் வருவதில்லை மட்டுமில்லாமல் மழை நேரங்களிலும் சுத்தமாக தண்ணீர் வரவில்லை மழை நேரங்களில் வீடு கூரைகளில் இருந்து வரும் தண்ணீரை சேகரித்து வைத்து அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றன இதனை பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ளாமல் இருக்கப்படுகிறது -சுபின்ஜி, பேயன்குழி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 1:59 PM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#7448

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவைமற்றவை

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரத்தை அருகில் யானைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது வரவேற்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது, நாகர்கோவில் மாநகராட்சியாக மாறிய பின்னும் பழைய வரவேற்பு பலகை அகற்றப்படாமல் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பலகை அகற்றி விட்டு புதிய வரவேற்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 1:41 PM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#4401

போக்குவரத்து இடையூறு

சாலை

நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து வாட்டர் டேங்க் ரோடு செல்லும் சாலையின் திருப்பம் உள்ளது. இந்த திருப்பத்தில் மாலை நேரங்களில் சிலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால், கடைகளுக்கு வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 July 2022 12:54 PM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#981

சீரான குடிநீர் தேவை

தண்ணீர்

புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட ருக்மணிநகரில் முத்தாரம்மன் கோவில் தெருவில் உள்ளது. இந்த தெருவில் கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick