Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 March 2023 7:52 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#29398

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

சுகாதார சீர்கேடுநாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள போலீஸ் நிலைய சாலையில் இருபுறங்களிலும் வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓடைகளை முறையாக பராமரிக்காததால் கழிவுகள் தேங்கி தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. அதன்மீது அமைக்கப்பட்டுள்ள சிலாப்புகளும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், மழை நேரங்களில் வடிகால் ஓடை நிரம்பி கழிவுநீரும், மழை வெள்ளத்துடன் கலந்து சாலையில் ஓடும் நிலை ஏற்படுகிறது. எனவே, வடிகால் ஓடையை தூர்வாரி அதன் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 8:42 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#28537

பயணிகள் அவதி

பயணிகள் அவதிசாலை

ஆரல்வாய்மொழி ஆட்டோ நிலையத்தின் எதிரில் நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் சிலர் தங்களது கார், சரக்கு வாகனங்களை பலமணி நேரம் நிறுத்துகின்றனர். இதனால், பஸ்சிற்காக காத்து நிற்கும் பயணிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவ,மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்நிறுத்தம் பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்துகிருஷ்ணன், ஆரல்வாய்மொழி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 8:17 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#27042

பழுதடைந்த தெருவிளக்கு

பழுதடைந்த தெருவிளக்குமின்சாரம்

திட்டுவிளையில் இருந்து மனதிட்டை செல்லும் சாலையில் ஒரு மின்கம்பத்தில் பொருத்தியுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. மேலும், இந்த தெருவிளக்கு கம்பத்தில் இணைக்கப்படாமல் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றிவிட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஜய்மணியன், மனதிட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 7:27 AM GMT
Mr.Dharmaraj | பத்மனாபபுரம்
#27025

படித்துறையை சீரமைக்க வேண்டும்

படித்துறையை சீரமைக்க வேண்டும்தண்ணீர்

படித்துறையை சீரமைக்க வேண்டும்அ௫விக்கரை ஊராட்சியில் அருவிக்கரை பரளியாறு பாய்கிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்காக படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த படித்துறை சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், குளிப்பதற்காக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி படித்துறை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செ.அர்ஜூன் ராம், அருவிக்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 7:25 AM GMT
Mr.Dharmaraj | கிள்ளியூர்
#27024

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சோதனைச்சாவடி அமைந்துள்ள பகுதியில் வளைவுகள் அதிகமாக உள்ளது. மேலும் சத்திரகாவு பிரிவு சாலையில் இருந்து வரும்போது, இந்த சாலையின் உயரம் அதிகமாக உள்ளது. இதனால் சாத்திரகாவு சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சத்திரகாவு செல்லும் சாலையின் மேடான பகுதியை சாய்வாக சீரமைக்க வேண்டும்.-சிவகுமார், கொல்லங்கோடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 7:22 AM GMT
Mr.Dharmaraj | குளச்சல்
#27023

மரத்ைத அகற்ற வேண்டும்

மரத்ைத அகற்ற வேண்டும்மின்சாரம்

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரையான்குளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் சாலையோரம் பட்டுப்போன தென்னைமரம் ஒன்று நிற்கிறது. இந்த மரம் காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து அருகில் உள்ள மின்கம்பிகள் மீது விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, ரீத்தாபுரம்.ரவி,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 7:19 AM GMT
Mr.Dharmaraj | பத்மனாபபுரம்
#27022

சீரமைக்கப்பட்டது

சீரமைக்கப்பட்டதுசாலை

அழகியமண்டபத்தில் இருந்து திருவட்டார் செல்லும் சாலையில் செவரக்கோடு அருகே குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு அதன் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சாலையின் நடுவே உயரமாக அமைந்திருந்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வந்தது. இதுபற்றி 'தினத்தந்தி புகார்பெட்டி'யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் உயரத்தை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 12:06 PM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#26202

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

பார்வதிபுரத்தில் இருந்து கணியாகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பாயும் கால்வாயின் மறுபுறம் 2 டாஸ்மாக் கடைகள், குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாகவும், சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையிலும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருதுடன் கால்வாயிக்குள் விழுந்து விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஜயலட்சுமி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 8:59 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#23040

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கை பாத்திமா நகரில் சாைல மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை எது? பள்ளம் எது? என தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து போதிய வடிகால் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முஹம்மது இப்திகார், பாத்திமாநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 8:58 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#23039

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பண்டாரபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க துரத்துகின்றன. மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் இருச்சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையில் சுற்றி திரியும் ெதருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.விஜேஷ், பண்டாரபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 8:56 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#23038

காத்திருக்கும் ஆபத்து

காத்திருக்கும் ஆபத்துமின்சாரம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு காந்தி மண்டபம் அருகே கடற்கரையில் ஒரு மின்இணைப்பு பெட்டியின் மூடி சேதமடைந்து திறந்தபடி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்டவர்கள் மின்இணைப்பு பெட்டியை பாதுகாப்புடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், கன்னியாகுமரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 8:54 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#23037

தெருவிளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் பகுதியில் நாராம்பிள்ளை காம்பவுண்டு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இரவு நேரத்தில் அந்த பகுதி மிகவும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹக்கீம், திட்டுவிளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick