Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 July 2022 5:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2146

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கிராமம் தட்டுமால் படுகை பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அந்த மின்கம்பிகள் அருகில் உள்ள மரக்கிளையிலும் உரசிய நிலையில் உள்ளது. இதனால் மழை நேரத்தில் மரங்களில் மின்சாரம் பாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கதிரவன், திருவளஞ்சுழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:57 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2141

அடிபம்பு சீரமைக்கப்படுமா?

அடிபம்பு சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் அடி பம்பு குழாய் பாதி மண்ணில் புதைந்து உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக இருப்பதால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடி பம்பு குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முருகன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:54 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2139

கொசுமருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

தஞ்சையில் பல்வேறு இடங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. எம். கே. மூப்பனார் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர் உள்பட தஞ்சை நகரில் மாலை நேரத்தில் கொசுக்களின் படைஎடுப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கொசுத்தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2106

பிழை திருத்தப்படுமா?

பிழை திருத்தப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை கல்லணைக்கால்வாயில் அகத்தியரின் சிலையின் கீழே தவறாக திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருக் குறளில் உள்ள தவறை கவனித்து பிழையை திருத்தி எழுதுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குணசகேரன், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 2:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2083

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியேறி ஊராட்சியில் பூதலூர் சாலையில் பரிசுத்தம்நகர் பகுதியில் (புதிய பாலத்தினையொட்டி) உள்ள மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து,சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.எனவே, இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.ஆகவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்பழகன்களிமேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:44 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1946

மதுபான கூடம் அப்புறப்படுத்தப்படுமா?

ட்ரெண்டிங்

ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி எதிரே மது பான கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மது பான கூடம் பள்ளி அருகிலேயே செயல்படுவதால் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் மதுவை குடித்து விட்டு சில இளைஞர்கள் மாணவிகளை கேலி செய்து வருகிறார்கள். இது பற்றி பல முறை போலீசில் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி எதிரே செயல்படும் மதுபானகூடத்தை அப்புறப்படுத்த...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1890

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

வாய்க்கால் தூர்வாரப்படுமா?மற்றவை

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி கிராமத்தில் வடிகால் செல்கிறது. இந்த வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல், குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது மேலும் வாய்க்காலில் விச பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த விச பூச்சிகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்காலை தூர் வாரவேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:22 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1889

மரக்கிளை அகற்றப்படுமா?

மரக்கிளை அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி வங்காரம்பேட்டை- தஞ்சை மெயின்ரோட்டில் மரத்தின் கிளை சாலையின் குறுக்கே வளைவு போல் செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் பாபநாசம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:05 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1887

போக்குவரத்து சிக்னல் செயல்படுமா?

போக்குவரத்து சிக்னல் செயல்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல் கம்பம் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் சிக்னல் செயல்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக அண்ணாசிலை, சோழன்சிலை, பழைய பஸ் நிலையம் போன்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரா. சரபேஷ், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:03 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1886

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் வயலூர் அருகே ராமாபுரம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சீரமைக்காமல் அப்படியே பாதியில் விட்டு விட்டனர். இதனால் இருசக்கர் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சதீஷ்கண்ணன்,தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1742

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைரெயில்நிலையம் அருகே உள்ள பாரதிநகர்,அண்ணாநகர், ஆர்.வி.நகர் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் ஏராளமான நாய்கள் கூட்டம்,கூட்டமாக சுற்றி திரிகின்றன. பஸ் நிலையத்தில் கூட்டமாக செல்லும் நாய்கள் பயணிகளை விரட்டி சென்று கடித்து விடுகின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தனியாக செல்லும் சிறுவர்-சிறுமிகளை கடித்து குதறி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டை நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 3:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1731

மண் குவியல் அகற்றப்படுமா?

மண் குவியல் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சையில் மேரீஸ் கார்னர் அருகே புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. வண்டிக்காரத்தெரு அருகே பாலத்தில் கீழ் பகுதியில் சாலையில் கிடந்த மணல் பரப்பை துப்புரவு பணியாளர்கள் அள்ளி அப்புறப்படுத்தாமல் பாலத்தில் ஓரங்களில் குவித்து வைத்துள்ளனர். தற்போது காற்று வேகமாக அடித்து வருவதால் குவித்து வைக்கப்பட்ட மணல் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் கண்களை பதம் பார்க்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் ஓரங்களில் உள்ள...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick