Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2022 3:25 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10523

விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்ல மாங்குடி, கம்மங்குடி, நெம்மேலி, செல்லும் தார் சாலையில் தார் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் நன்னிலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 3:27 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10522

பன்றிகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் நகர், சேந்தமங்கலம், விளமல், புலிவலம் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றிதிரிகின்றன. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 3:23 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10519

கால்வாய் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அகரதிருமாளம் கிராமத்தில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் விளைந்த நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். அருகில் கால் வாய் உடைந்து சேதமடைந்து இருப்பதால் மழைத்தண்ணீர் வயலுக்குள் பாய்ந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள், நன்னிலம் =====================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10503

சேறும் சகதியுமான சாலை

சாலை

மன்னார்குடியில் சிராஜ்நகர், சுஜித் நகர் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதிஇல்லை. இதனால் அந்தபகுதி மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனேவ, சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10498

கழிவறை வசதி வேண்டும்

மற்றவை

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவாரூர் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் கோவில் வந்து செல்வோர் பயன்படுத்துவதற்கு கழிவறை, குளியலறை வசதிகள் இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு அருகே பொதுமக்களின் வசதிக்காக குளியலறை, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -பொதுமக்கள் திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:53 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10494

சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம்

மற்றவை

மயிலாடுதுறையில் சின்ன மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இதனால் இந்த தெருவின் வழியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை மூடி உடைந்து அபாய பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:52 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10489

குட்டையில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை, பூம்புகார் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிரே அய்யங்குட்டை உள்ளது. இந்த குட்டையின் மூலம் அந்த பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். தற்போது இந்த குட்டை உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதிமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குட்டையில் உள்ள கழிவுநீரை அகற்றி விட்டு நல்ல நீரை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:51 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10487

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எ.சாத்தனூர் கிராமத்தில் மேலத்தெரு, சிவன் கோவில் பகுதி, வடக்குத்தெரு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பொது மக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:49 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10483

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுத்தொல்லையால் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேதாரண்யம் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்பொதுமக்கள்,வேதாரண்யம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:47 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10480

கால்நடைகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:46 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10478

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆழியூர் பிரிவு சாலை அருகில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இந்த இடத்தைக் கடந்து செல்லும் வாகனங்கள், மிகவும் வேகமாக செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆழியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:45 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10475

தார்ச்சாலை வசதி வேண்டும்...

சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி துண்டம்பாலூர் திரிகுளத்தெரு கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன.இங்கு தார்ச்சாலை வசதி கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வர சிரமமான நிலை உள்ளது.மேலும் மழை காலங்களில் மண் சாலைகளில் சேறும், சகதிகமாக உள்ளது. இதனால் அந்த சாலை யை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து கொடுக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick