Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Aug 2022 4:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10947

வடிகால் வசதி வேண்டும்

தண்ணீர்

தஞ்சையில் பெய்த மழையால் பூக்காரத்தெரு ரெயில்வே கீழ் பாலத்தில் மழை நீர் வடிவதற்கு வசதி இல்லாமல் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வசதியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10939

கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

கருவேலமரங்கள் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

பூதலூர் ஒன்றியம் மேலத்திருவிழாப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் படர்ந்து விரிந்து சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுப் பாசன பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள மேலத்திருவிழாபட்டி ஏரிக்கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,பூதலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10938

சீரமைக்கப்பட்ட சாலை

சாலை

திருக்காட்டுப்பள்ளி காவிரி மற்றும் குடமுருட்டி ஆற்று பாலங்களில் உள்ள சாலை சிதிலமடைந்து இருந்தது குறித்து புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பாலத்தில் உள்ள சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர். பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10937

வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

சாலை

திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அருகில், மற்றும் அங்கு உள்ள மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகே சாலையில் வேகத்தடை உள்ளது. இதில் உள்ள இரண்டு வேகத்தடைகளிலும் வெள்ளைக் கோடுகள் இல்லை. இதனால் வேகமாக வரும் வாகன ஒட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வந்து விபத்தில் சிக்குகின்றனர்.உடனடியாக திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தின் அருகில் உள்ள இரண்டு வேகத்தடைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வண்ணம் பூச வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10935

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள விசிறிகாரத்தெரு,தாசப்பநாயக்கன் தெரு போன்ற சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 3:20 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10917

போக்குவரத்து சீரமைக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் சாலையை ஆக்கிரமத்துள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கடைக்கு வரும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமுல்லைவாசல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 2:49 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10893

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பொறையாறு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 2:41 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10880

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகே உள்ள மின் கம்பத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களில் மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பிகளை தாழ்வாக செல்லாமல் மேலே உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 2:07 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10857

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திட்டச்சேரியிலிருந்து நாகூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 2:05 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10856

தேங்கும் கழிவு நீர்

கழிவுநீர்

நாகை பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 2:04 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10854

மாடுகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன.இதனால், போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாடுகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 2:02 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10853

அடி பம்பு சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தெருவில் உள்ள அடிபம்பு கடந்த சில மாதங்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் குடி நீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த அடி பம்பை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயராஜ் - தேவன்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick