Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 1:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#15696

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிவளையல்கார தெருவில் குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகள் தேங்காமல் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,திருத்துறைப்பூண்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 2:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15508

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை நகரில் ரெயில்நிலையம், பஸ் நிலையம், காமராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 2:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15507

மின் விளக்கு எரியுமா?

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு, கிழவீதியில் உயர் கோபுர மின் கம்பம் உள்ளது. இதில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவது இல்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இருட்டாக இருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் , திருவெண்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 2:02 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15506

செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் வடரங்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருபுறமும் செடி கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையின் இருபுறமும் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வடரங்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 2:01 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15505

சாய்ந்த மின் கம்பங்கள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதனை சுற்றி உள்ள வயல் வெளியில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அறுவடை எந்திரங்கள், டிராக்டர்களை வயலுக்குள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 2:00 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15504

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறையிலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலை மிகவும் குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருநள்ளாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:59 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15503

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை நகரில் தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ராஜீவ்நகர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:57 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15502

கழிவுநீர் கலந்த குடிநீர்

தண்ணீர்

தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 6 கங்காநகர் பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் தினமும் ஏராளமான மக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர். இந்த குழாய்க்கு அருகில் உள்ள கழிவு நீர் சாக்கடை செல்கிறது. இதனால் குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீருடன் சாக்கடைகழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கங்காநகர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15500

தூர்வாரப்படுமா?

சாலை

தஞ்சை கரந்தை பகுதியில் இருந்த சுங்கம் தவிர்த்தான் பாசன வாய்க்காலில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மேலும் ஆகாய தாமரைகள் புதர்போல மண்டிக்கிடக்கிறது. மேலும் கழிவு நீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுங்கம் தவிர்த்தான் பாசன வாய்க்காலை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கரந்தை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15497

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி, அரசு ஆஸ்பத்திரி வழியாக செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு வாகனத்தில் வரும் நோயாளிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அபூபக்கர்,அதிராம்பட்டினம் ===========

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15495

பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?மற்றவை

கும்பகோணத்தில் சாக்கோட்டை செல்லும் சாலையில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் உள்ளன. இவை அனைத்தும் சாலையின் சம அளவில் இருந்து அரை அடி பள்ளத்தில் உள்ளன. இதனால் இப்பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதாள சாக்கடை மூடிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சாக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 1:31 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15283

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதி வள்ளுவர் தெரு, விளக்கு முகத்தெரு, இந்திரா நகர், ரெயில்வே ரோடு, மருவத்தூர், மேல்பாதி, அண்ணா நகர், கீழத்தெரு, நெய்குப்பை பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick