Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2022 12:11 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#8038

விபத்து ஏற்படும் அபாயம்

சாலை

ஈரோட்டில் உள்ள முக்கிய சாலைகளில் பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள நாச்சியப்பா வீதி, அகில்மேடு 7-வது வீதி, ஈரோடு ரெயில் நிலையம் அருகில் உள்ள சென்னிமலைரோடு, நாடார்மேடு லெனின் வீதி உள்ளிட்ட இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 7:51 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#7996

அரசு டவுன்பஸ் வசதி

போக்குவரத்து

அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபி செல்வதற்கு காலை 6.30 மணி மற்றும் 7 மணிக்கு அரசு டவுன் பஸ்கள் உள்ளன. அதற்கு மேல் 8.55 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், கூலிவேலைக்கு செல்லும் பெண்களும் அவதிப்படுகிறார்கள். இல்லை என்றால் தனியார் பஸ்களில் கட்டணம் கொடுத்து செல்கிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாாிகள் 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் அத்தாணி வழியாக கோபிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 1:30 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#7846

விபத்தை ஏற்படுத்தும் குழி

சாலை

ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் ரோட்டின் வளைவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான குழி காணப்படுகிறது. இந்த ரோட்டில் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். இத்தகைய ரோட்டில் குழி இருப்பது அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 1:29 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#7844

ஆறுபோல் ஓடும் கழிவுநீர்

ஆறுபோல் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

ஈரோடு வெட்டுக்காட்டு வலசில் பாதாள சாக்கடையில் இருந்து தண்ணீர் வெளியேறி ரோட்டில் ஆறுபோல் செல்கிறது. மேலும் அருகே உள்ள காலி இடத்தில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிக அளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை உடைப்பை சரிசெய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 7:28 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#7779

புதர் மண்டிய பூங்கா

புதர் மண்டிய பூங்காபூங்கா

கோபி ஜி.சி.ஆர். நகரில் நகராட்சி பூங்கா புதர் மண்டி காணப்படுகிறது. அதனால் அங்கிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து விடுகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் ஜி.சி.ஆர். நகரில் உள்ள பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 12:53 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#7625

திறந்து கிடக்கும் தொட்டி

திறந்து கிடக்கும் தொட்டிமற்றவை

கோபி அரசு மருத்துவமனை ரோட்டில் (தனியார் மருத்துவமனை எதிரில்) குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டி மூடப்படாமல் உள்ளது. இரவில் இந்த தொட்டி திறந்து கிடப்பது தெரியாது. அதனால் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்டவர்கள் இந்த தொட்டியை மூடவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 12:50 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#7620

சுத்தமில்லாத பூங்கா

சுத்தமில்லாத பூங்காபூங்கா

கோபி மாதேசியப்பன் வீதியில் வாசு-லே-அவுட் நகர் செல்லும் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்போல் உள்ளது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால் புதர் மண்டிய பூங்காவில் இருந்து விஷப்பூச்சிகள் வந்து விடுகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுத்தப்படுத்தவேண்டும். ,

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:48 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#6529

ரோட்டில் குப்பை

குப்பை

ஈரோடு சூளை எம்.ஜி.ஆர். நகரில் பெரும்பள்ளம் ஓடை அருகே பலர் குப்பைகளை போட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அந்த ரோட்டில் நடந்து ெசல்லமுடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவவாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:45 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#6524

குண்டும்-குழியுமான சாலை

குண்டும்-குழியுமான சாலைசாலை

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் நாச்சியப்பா வீதியில் உள்ள ரோடுகள் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் செல்ல முடியவில்லை. மேலும் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே குண்டும்-குழியுமான இந்த சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 8:33 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#6482

பாராட்டு

பாராட்டுமற்றவை

கோபி நகரில் இருந்து தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்தில் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ள ஓடையின் மேல் தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்து படர்ந்து காணப்பட்டது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கீரிப்பள்ளம் ஓடையில் தொங்கு பாலத்தின் கீழ் உள்ள செடி-கொடிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 8:31 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#6481

பழுதடைந்த ரோடு

பழுதடைந்த ரோடுசாலை

கோபி புதுப்பாளையம் மணிமேகலை வீதியில் கடந்த ஆண்டு குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டினார்கள். அதன்பின்னர் ரோட்டை சீரமைக்கவில்லை. அப்படியே விட்டு விட்டார்கள். இதானால் அப்பகுதி மக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணிமேகலை வீதியில் ரோட்டை சீரமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 8:27 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#6480

விபத்தை ஏற்படுத்தும் குழி

சாலை

கோபியில் ஈரோடு செல்லும் ரோட்டில் பஸ்நிலையம் அருகில் (ஒரு வங்கியின் எதிரில்) பெரிய குழி உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த குழியில் இறங்கி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த குழியை உடனே மூடவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick