Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Oct 2022 6:44 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#20273

வடிகால் வேண்டும்

கழிவுநீர்

கோபி சாய் சுப்பிரமணிய நகரில் உள்ள ஒரு வீதியில் கழிவு நீர் செல்ல கால்வாய், சாக்கடை வசதி இல்லை. இதனால் பல ஆண்டுகளாக கழிவு நீர் குட்டை போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இப்பகுதிக்கு சாக்கடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 6:36 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#20271

சாக்கடை வசதி

கழிவுநீர்

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் அருகே உள்ள குப்பந்துறை புதுக்காலனியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் மழை பெய்யும்போது வீடு மற்றும் வீதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வீதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 1:35 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#17601

நடக்க முடியாத ரோடு

நடக்க முடியாத ரோடுசாலை

கோபி நகராட்சிக்கு உட்பட்ட ஒட்டரூர் வீதியில் நடக்க கூட முடியாத அளவுக்கு ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இருச்ககர வாகன ஓட்டிகள் செல்லும்போது அடிக்கடி தடுமாறி கீழே விழுகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒட்டரூர் வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 9:45 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#17534

ஓடையில் குப்பை

ஓடையில் குப்பைகுப்பை

கோபி தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. அந்த ஓடையின் ஒரு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. குப்பை கழிவுகள் நீண்ட நாட்கள் தேங்கிவிட்டால் தண்ணீர் செல்ல தடை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:04 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#15477

தெருவிளக்கு வசதி

மற்றவை

ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் ரோட்டில் கருங்கரடு என்ற இடத்தில் இருந்து காரணாம்பாளையம் வரை ரோட்டில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 12:58 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#15475

பாராட்டு

மற்றவை

ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதி வழியாக பஸ்கள் வெளியே வரும் வழியில் பெரிய பள்ளம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறினார்கள். சிறு சிறு விபத்துகளும் நடைபெற்று வந்தன. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளத்தில் மண் நிரப்பி சரிசெய்து உள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்ைடயும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 12:56 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#15474

சீரழிந்த சாலை

சாலை

ஈரோடு வெண்டிபாளையம் ரோடு பல ஆண்டுகளாக சீரழிந்த நிலையில் உள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுகிறார்கள். நெடுஞ்சாலைத்துறை உடனே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 1:42 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#15285

விபத்து ஏற்படும் அபாயம்

சாலை

ஈரோடு சோலாரில் இருந்து பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் செல்லும் முக்கிய ரோட்டில் பல இடங்களில் நடுரோட்டிலேயே பாதாள சாக்கடை மூடி உள்ள இடம் பள்ளமாக உள்ளது. அருகே சென்றால்தான் அவைகள் தெரிகின்றன. விபத்து ஏற்படுவதற்குள் அதிகாரிகள் இதை சரிசெய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 8:08 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#15213

பகலில் ஒளிரும் மின்விளக்கு

பகலில் ஒளிரும் மின்விளக்குமின்சாரம்

சித்தோட்டில் காலை 8.30 மணி அளவில் கூட தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. பட்டப்பகலில் தெருவிளக்குகளை அணைக்காமல் ஒளிரவிட்டால் தேவையற்ற மின்கட்டணமும் செலுத்தவேண்டும். மின்சாரமும் வீணாகும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 1:01 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#14654

நிழற்குடை வேண்டும்

மற்றவை

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மாநகராட்சி சார்பில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டதால், நிழற்குடை அகற்றப்பட்டது. அதன்பிறகு புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே காளைமாட்டு சிலை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 12:24 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#14634

வேகத்தடை தெரியவில்லை

சாலை

ஈரோடு வெண்டிபாளையத்தில் இருந்து சோலார் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலையில் 3 வேகத்தடைகள் உள்ளன. வர்ணம் பூசப்படாததால் வேகக்கட்டுப்பாட்டு வசதி இல்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்டிபாளையம் ரோட்டை செப்பனிடவும், வேகத்தடைக்கு பெயின்ட் அடிக்கவும் வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 7:37 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#14574

நீரோடையில் குப்பை

நீரோடையில் குப்பைகுப்பை

அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் ஒரு சிறிய நீரோடை செல்கிறது. அந்த நீரோடையிலேயே குப்பைகளை டன் கணக்கில் கொட்டியுள்ளார்கள். இதனால் தண்ணீர் செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீரோடையில் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick