Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Nov 2022 6:24 AM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#22108

அடிப்படை வசதி

சாலை

அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள சோளகணை மலைப்பகுதிக்கு செல்லும் 10 கி.மீ. தூர சாலை மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் தட்டு தடுமாறி சென்று வருகின்றன. மேலும் சோளக்கணையில் ரேஷன் கடை, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. சாலையை சீரமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 6:22 AM GMT
Mr. P.Saravanan | பவானிசாகர்
#22107

சீரமைக்க வேண்டும்

சீரமைக்க வேண்டும்சாலை

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலை பல நாட்களாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த இடத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் அதிகம் ஏற்படலாம். உடனே சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:58 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#21657

பாலத்தின் கீழே பள்ளம்

சாலை

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் சாவடிப்பாளையம் அருகே ரெயில்வே பாலம் செல்கிறது. இந்த பாலத்தின் கீழே உள்ள ரோட்டில் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பெரிய பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டன. மேலும் அருகே உள்ள உள்ள கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் இந்த ரோட்டில் வழிந்தோடுகிறது. அதனால் ரோடு மிகவும் மோசமடைந்துவிட்டது. அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் கீழே உள்ள ரோட்டை உடனே பராமரிக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:47 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#21656

ஓடையில் செடி-கொடிகள்

ஓடையில்  செடி-கொடிகள்மற்றவை

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் கல்லறை தோட்டம் அருகே கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் செடி-கொடிகள் ஆக்கிரமித்து விட்டதால் கழிவுநீர் செல்வதற்கு தடையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கீரிப்பள்ளம் ஓடையில் இருக்கும் செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:33 AM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#21655

பாலம் அமைக்க வேண்டும்

மற்றவை

அந்தியூர் அருகே உள்ள மலைக்கிராமம் காக்காயனூர். இங்குள்ளவர்கள் ரேஷன் கடை, ஆஸ்பத்திரி பள்ளிக்கூத்துக்கு போக அங்குள்ள காட்டாறை தாண்டி செல்ல வேண்டும. மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் மழைக்காலங்களில் ரேஷன் கடை மற்றும் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்களும், பள்ளிக்கூடத்துக்கு மாணவ- மாணவிகளும் செல்ல முடியவில்லை. எனவே காக்காயனூர் காட்டாற்றில் பாலம் கட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:30 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#21654

பாதையில் வழியும் கழிவுநீர்

கழிவுநீர்

எலவமலை ஊராட்சி பெரியார் நகர் மணல் ஆபிஸ் வீதியில் சாக்கடை மற்றும் ரோடு போடுவதற்காக ஜல்லிகள் கொண்டு வந்து போட்டார்கள். ஆனால் அதன்பின்னர் எந்த பணியும் நடைபெற்றவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மக்கள் நடந்து செல்லும் பாதையிலேயே வழிந்தோடுகிறது. இதன்காரணமாக கொசுததொல்லையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாக அதிகாரிகள் சாக்கடை, ரோடு போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:28 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#21653

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

சத்தியமங்கலத்தில் உள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையிருந்து செண்பகபுதூர் பவர் ஹவுஸ் மூலக்கிணறு பிரியும் சாலையில் கேபிள் பதிப்பதற்காக ரோட்டின் குறுக்கே குழி பறித்தார்கள். அதன்பின்னர் அதை சரி செய்யவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். அவம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேபின் குழியை சரி செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:21 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#21651

ஆபத்தான குழி

ஆபத்தான குழிசாலை

கோபி அக்ரஹாரம் கிருஷ்ணன் வீதியில் இருந்து காட்டு கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் ரோட்டின் முகப்பில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் குழி இருப்பது தெரியாமல் அதில் மோதி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. மேலும் அந்த குழிக்குள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டமும் காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 1:13 PM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#20348

பழுதடைந்த சாலை

சாலை

அந்தியூர் அருகே உள்ள பெருமாபாளையம் வனசின்னப்பர் கோவில் பகுதியில் தார்சாலை மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது அந்த ரோட்டில் நடந்து செல்லக்கூட சிரமமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனசின்னப்பர் கோவில் பகுதியில் ரோட்டை சீரமைப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 1:11 PM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#20346

பாலம் அமைக்கப்படுமா?

மற்றவை

அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் கெட்டி சமுத்திரம் ஏரி அமைந்துள்ளது. ஏரி நிரம்பும் காலங்களில் அதிக அளவு உபரி நீர் சாலையில் ெவளியேறுகிறது. இதனால் அங்கு சாலை பழுதாவதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே அங்குள்ள மக்களின் வசதிக்காக அந்த இடத்தில் மேம்பாலம் கட்டித்தர ஆவன செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 1:09 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#20345

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்நிலையம் நோக்கி செல்லும் ரோட்டில் சூரம்பட்டி நால்ரோட்டுக்கு முன்பாக பட்டத்தரசி அம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தில் ரோடு மிகவும் மோசமாக, குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த இடத்தில் விழுகிறார்கள். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இனியாவது அங்கு ரோட்டை சீரமைப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 1:08 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#20344

மதுபிரியர்களால் தொல்லை

மற்றவை

ஈரோடு சம்பத் நகரில் அண்ணா தியேட்டர் ரோட்டில் சாலையோரம் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுகுடிக்க வருபவர்கள் போதை தலைக்கு ஏறியதும் அரைகுறை ஆடையுடன் மக்கள் நடந்து செல்லும் பாதையலேேய படுத்து கொள்கிறார்கள். மேலும் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இதனால் பெண்கள், பள்ளி மாணவிகள் அந்த இடத்தை கடந்து செல்வதற்கே அஞ்சுகிறார்கள். எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை ஒதுக்குப்புறமாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick