Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Nov 2024 8:27 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#51348

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் புது ஓட்டல் தெரு ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சாலையோரம் குப்பைகள் மலைப் போல் குவிந்து வைத்துள்ளனர். அந்தக் குப்ைபகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51347

மயானத்தில் கொட்டப்படும் குப்ைபகள்

மயானத்தில் கொட்டப்படும் குப்ைபகள்குப்பை

ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் உள்ள மயானப் பகுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகள் கொட்டப்படுவதால், மயானத்துக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அசோகன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51346

பஸ் டிக்கெட் முன்பதிைவ முறைப்படுத்துவார்களா?

போக்குவரத்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலமாக விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் ஆரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து சென்னை வரை செல்வதற்கு ஆன்லைன் புக்கிங் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆரணியில் இருந்து சென்னை வரை செல்வதற்கு ரூ.135 கட்டணம் ஆகிறது. ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யும் கட்டணம் ரூ.164 வசூலிக்கப்படுகிறது. அதற்காக காலை 10.30 மணி, 11 மணி, 12.15 மணி, 1 மணி, 10 மணி என 4 நேரங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிற டிக்கெட்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:17 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#51345

கால்வாயை தூர்வார ேவண்டும்

கால்வாயை தூர்வார ேவண்டும்கழிவுநீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு அச்சரப்பாக்கம் ரோட்டில் காவல் குடியிருப்பு அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏராளமான குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்றி, கால்வாைய தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51344

எரியாத உயர் கோபுர மின் விளக்கு

எரியாத உயர் கோபுர மின் விளக்குமின்சாரம்

ஆரணி காந்தி சிலை அருகே உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூக விரோத செயல்கள் நடப்பதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயர் கோபுர மின் விளக்குகளை எரிய விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ஜோசப்சவுந்தர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51342

அண்ணா சாலையில் கூடும் மாடுகள்

அண்ணா சாலையில் கூடும் மாடுகள்சாலை

வேலூர் நகரம் முழுவதும் மாடுகள் ெதால்லை அதிகமாக உள்ளது. பொது இடங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிகின்றன. நகரின் மையப்பகுதியான கோட்டை அருகில் உள்ள அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் கூடுகின்றன. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 7:54 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#51340

பொது வழி ஆக்கிரமிப்பு

பொது வழி ஆக்கிரமிப்புசாலை

கே.வி.குப்பம் தாலுகா மாளியப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதன் அருகில், பல ஆண்டுகளாக வாகனங்கள் செல்ல பொதுவழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பகுதியில் திடீரெனக் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளார்கள். இதை அகற்றி வழக்கம்போல் போக்குவரத்துக்கு வழி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோ.பாலகோபால், மாளியப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 7:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51339

ஆபத்தான கால்வாய் சிலாப்

ஆபத்தான கால்வாய் சிலாப்சாலை

வேலூர்-ஆரணி சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் அதில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 7:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51338

தெர்மாகோல் கழிவு அகற்றப்படுமா?

தெர்மாகோல் கழிவு அகற்றப்படுமா?குப்பை

வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் பக்கத்தில் மீன்களை பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்படும் தெர்மாகோல் பெட்டிகள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில தெர்மாகோல் அதன் அருகில் உள்ள கால்வாயில் கிடப்பதால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே கால்வாய் பக்கத்தில் குவிந்து கிடக்கும் தெர்மாகோல் பெட்டிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்காதர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51174

புதிய பஸ் நிலையம் தரைப்பகுதி சரி செய்யப்படுமா?

புதிய பஸ் நிலையம் தரைப்பகுதி சரி செய்யப்படுமா?மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு விரைவு பஸ் அலுவலகம் அருகே தரைப்பகுதி கற்கள் பெயர்ந்து பள்ளமாகக் காணப்படுகிறது. இதனால் பயணிகள் நடந்து செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தரைப்பகுதியைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 50
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:49 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#51172

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

காட்பாடியை அடுத்த லத்தேரி அருகே அன்னங்குடி பெருமாள் கோவிலில் இருந்து காமாட்சி அம்மன் பேட்டை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து ஆங்காங்கே மேடும் பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுபாஷ், அன்னங்குடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:43 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#51171

குண்டும் குழியுமான சாலை

சாலை

குடியாத்தத்தில் உள்ள திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக ைசக்கிளிலும், நடந்தும் வரும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும். -செல்வகுமார், குடியாத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick