Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Dec 2024 7:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#52291

மூடியே கிடக்கும் விவசாயிகள் ஓய்வறை

மூடியே கிடக்கும் விவசாயிகள் ஓய்வறைமற்றவை

ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகம் பின்பக்கம் வேளாண் பொறியியல் அலுவலகம் அருகே விவசாயிகள் ஓய்வறை உள்ளது. அது, விவசாயிகளுக்குப் பயன்படாமல் எப்போதும் மூடிேய உள்ளது. அங்கு முட்செடிகள் வளர்ந்து, விஷ ஜந்துகள் நடமாடும் இடமாக மாறி விட்டது. விவசாயிகளுக்குப் பயன்பட வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? -சேகர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 7:14 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#52288

டவுன் பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுமா?

போக்குவரத்து

காட்பாடி-பாகாயம் இடையே 21 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு 8.30 மணிக்கு மேல் காட்பாடியை நோக்கி வரும் டவுன் பஸ்கள் பெரும்பாலும், அவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. அந்தப் பஸ்கள் 5 நிமிடத்தில் 5 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகின்றன. இதனால் பயணிகளுக்கு பயன்படாத நிலை உள்ளது. எனவே டவுன் பஸ்களை உரிய நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.துரை, செங்குட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 7:09 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#52286

தார் பெயர்ந்த சாலை

தார் பெயர்ந்த சாலைசாலை

தொரப்பாடிக்கு அருேக உள்ள கேசவபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்பக்கம் புத்தேரி தெரு உள்ளது. எங்கள் தெருவில் உள்ள தார் சாலை பெயர்ந்து நடந்து செல்லக்கூட தகுதி இல்லாத நிலையில் உள்ளது. எங்கள் தெருவில் உள்ள சாலையை பெயர்த்தெடுத்து விட்டு புதிதாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வே.சதீஷ்குமார், கேசவபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 7:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52284

அளவு குறைத்து டீ விற்பனை

மற்றவை

வேலூரில் உள்ள பல டீக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய கண்ணாடி டம்ளர்களில் வழங்கப்பட்டு வந்த டீ தற்போது பாதியாக அளவு குறைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர்களில் வழங்கப்படுகிறது. அந்த டம்ளரிலும் பாதி அளவே டீ வழங்கப்படுகிறது. இதுகுறித்து கடையினரிடம் கேட்டால் இவ்வளவு தான் வழங்க முடியும் என வீண் வாதம் பேசி சமாளிக்கின்றனர். பலர் அவமானமாக கருதி கேட்பதில்லை. எனவே வாடிக்கையாளர்களுக்கு டம்ளர்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு டீ வழங்குவதை உறுதி செய்ய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 7:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52283

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வேலூர் வேலப்பாடி பாட்டை தெருவில் பஸ் நிறுத்தம் இருபக்கமும் உள்ள கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. மழை நேரத்தில் மழைநீர் ஓட வழியில்லாமல் சாலையில் தேங்குகிறது. வேலப்பாடி பஸ் நிறுத்தம் தெருவில் இரு பக்கமும் உள்ள கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். -குணா, வேலப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 8:26 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#52113

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி அமைத்து விட்டு புதிய கம்பம் நட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பையன், லட்சுமிபுரம்.

மேலும்
ஆதரவு: 28
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 8:24 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#52112

சேறும், சகதியான மண்சாலை

சாலை

நாட்டறம்பள்ளியை அடுத்த புத்துக்கோவில் நெடுஞ்சாலையில் இருந்து அங்குள்ள ரேஷன்கடை செல்லும் வழி மண்சாலையாக உள்ளது. இதனால், மழைக் காலங்களில் மண்சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மண் சாலையை தார் சாலையாகவோ அல்லது சிமெண்டு சாலையாகவோ மாற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியம், புத்துக்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 8:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52111

மின்கம்பத்தை சூழ்ந்த கொடிகள்

மின்சாரம்

திருப்பத்தூரை அடுத்த திம்மாம்பேட்டை அருகே தெக்குப்பட்டில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை சுற்றி உள்ள கொடிகளை அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, திம்மாம்பேட்டை.

மேலும்
ஆதரவு: 10
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 8:12 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#52110

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் அருகே மண்டலநாயனகுண்டாவில் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி பள்ளத்தில் விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. அந்தச் சாலையில் உள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயச்சந்திரன், வெலக்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 8:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52109

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து கொரட்டிக்குச் செல்லும் சாலையோரம் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தட்சிணாமூர்த்தி, கொரட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 8:08 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52108

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

ராணிப்ேபட்டை மாவட்டம் அரப்பாக்கம் பகுதியில் இருந்து பூட்டுத்தாக்கு செல்லும் சாலையோரம் மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுகிறார்கள். அந்த குப்பைகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் கிளறி சாலையில் போடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோகுல், அரப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 8:03 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52107

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

மற்றவை

வாலாஜாபேட்டையில் மழைப் பெய்தால் பாதிக்கப்படும் தெருக்களில் ஒன்று பஸ் நிலையம் பின்பக்கம் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு. இந்தத் தெருவில் சாலை சரியில்லை, பழுதடைந்துள்ளது. தெருவில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் அந்த வழியாக பஸ்கள், லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. ஆகவே வாலாஜா நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும். -குணசேகரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick