Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2022 10:13 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#14792

அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவார்களா?

மற்றவை

சென்னையில் சாலையோரம் பைக்கில் சென்ற ஒரு பெண் மீது பேனர் விழுந்து பலியானார். இது ஒரு புறம் இருக்க, மீண்டும் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது. பேனர்களால் பல இடங்களில் விபத்துகள் நடக்கின்றன. காட்பாடி-லத்ேதாி சாலையில் கரசமங்கலம் பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா? -கனகசபை, கரசமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 6:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#14564

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

திருப்பத்தூர் பஸ் நிலைய பகுதியில் நகராட்சி சார்பில் ஆண்களுக்கான இலவச சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டிக் கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அதன் அருகே கட்டண கழிப்பறைக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கும் சுகாதாரம் இல்லாமலும், அதிக கட்டணம் வசூலிப்பதாலும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:54 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#14562

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?தண்ணீர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆரிப் நகர் பகுதிக்காக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்ட, குடிநீர் ஏற்றப்படாமல் பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீரை ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -சுப்பிரமணி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:50 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#14561

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்துக்கு முன்பு குப்பைகள் கொட்டப்படுது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்குள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அகற்ற வேண்டும். -மணி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:11 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#14552

மரங்களை வேருடன் பிடுங்கும் அவலம்

மற்றவை

சோளிங்கர் தாலுகா கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரராகவபுரம் கிராமத்தின் ஏரிக்கரையில் 500-க்கும் மேற்பட்ட பனைமரங்கள், ஈச்ச மரங்கள் இருந்தன. சிலா் மரங்களை வேருடன் பிடிங்கி எடுத்து சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பெரிய மால்களில் காட்சி பொருளாக வைப்பதற்கு கடத்துவதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இமானுவேல், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:03 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#14549

பழைய மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியுமா?

பழைய மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியுமா?மின்சாரம்

ஆற்காடு பழைய மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாமல் வாகனம் ஓட்ட வேண்டி உள்ளது. விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வெங்கடரத்தினம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:55 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#14442

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பை

நாட்டறம்பள்ளி அருகே காந்தி நகர் பகுதியில் சாலை ஓரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குப்பைகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இது வரை குப்பைகளை அகற்றவில்லை. இனியாவது குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்? -ல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:01 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#14396

ஆபத்தான கட்டிடம்

ஆபத்தான கட்டிடம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. அதன் அருகில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு வரும் நபர்கள் பத்திரம் பதிவு செய்ய, பத்திரம் எழுதுபவர்கள் புதிய கட்டிடத்தில் இடம் இல்லாததால், அருகில் உள்ள பழமை வாய்ந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் உட்கார்ந்து பத்திரம் எழுதுகிறார்கள். எழுத வருபவரும் அங்கு தான் அமருகிறார்கள். பழைய கட்டிடம் சேதம் அடைந்து இருப்பதால் எப்போது விழும் எனத் தெரியவில்லை. ஆபத்து வரும் முன்பு சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:37 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#14385

பூங்காவை சீரமைப்பார்களா?

பூங்காவை சீரமைப்பார்களா?பூங்கா

பூங்காவை சீரமைப்பார்களா? வந்தவாசிைய அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் உள்ளது. அங்கு தினமும் காலை, மாலை வேளையில் பலர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். பூங்கா சரியான முறையில் பராமரிப்பு இல்லாததாலும், உடற்பயிற்சி உபகரணங்கள் இல்லாததாலும் மக்கள் பயன்படுத்துவதில்லை. உடனே அரசு தலையிட்டு சீரமைத்துக் கொடுக்குமா? -குப்புசாமி சென்னாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:22 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#14379

சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்து‌ நிற்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் பொதுச்சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்துத் தர வேண்டும். -கே.ராமசாமி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:19 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#14378

பயனற்ற கண்காணிப்பு கேமராக்கள்

பயனற்ற கண்காணிப்பு கேமராக்கள்மற்றவை

ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பின்பக்கம் மலையைச் சுற்றி தினமும் பகல் இரவில் பக்தர்கள் பலர் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமிராக்கள் பெரும்பாலானவை தலைகீழாக பயனற்றுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -அருணாசலம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:21 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#14371

இருளில் தவிக்கும் பயணிகள்

இருளில் தவிக்கும் பயணிகள்போக்குவரத்து

வேலூர் புதிய பஸ்நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பஸ்நிலையத்தில் முகப்பு பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. வரவேற்பு வளைவு பகுதியில் இருந்து பஸ்நிலையத்தி்ன் உள்ளே பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால், பயணிகள் இரவு நேரம் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்விளக்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சிங்காரம், வேலூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick