Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2022 12:46 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#14858

தினத்தந்திக்கு நன்றி

குப்பை

நாட்டறம்பள்ளி அருகே காந்தி நகர் பகுதியில் சாலை ஓரம் குப்பைகள் கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முகத்தை சுளித்து கொண்டு செல்லும் அவல நிலை இருந்தது. அந்தக் குப்பைகளை அகற்றக் கோரி தினத்தந்தி புகார் பெட்டியில செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி ெவளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. -இல. குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 12:04 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#14815

கழிவுநீர், மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்

கழிவுநீர், மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்கழிவுநீர்

வாணியம்பாடியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் கால்வாய் மீது ஒரு பகுதி கட்டப்பட்டுள்ளதால், அந்த பகுதியின் வழியே செல்ல வேண்டிய மழைநீர், கழிவுநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குள் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இங்கு செல்ல வேண்டும் என்றால் கார், ஜீப் போன்ற வாகனத்தில் மட்டுமே செல்லும்படி உள்ளது‌. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர், கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 11:56 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#14812

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் உள்ள பஸ் நிலையத்தில் இரவு பகல் பாராமல் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே பேரூராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும். இல்ைலயேல் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -சத்தியமூர்த்தி, ஆலங்காயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 11:47 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#14810

சாலை நடுவில் பள்ளம்

சாலை நடுவில் பள்ளம்சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா ஆட்டோ நிறுத்துமிடம் அருகில் உள்ள சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அந்தச் சாலையை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கமல், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 11:33 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#14809

உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

கீழ்பென்னாத்தூரில் இருந்து அவலூர்பேட்டை செல்லும் சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளக்கரை தெரு, திரவுபதியம்மன் கோவில் தெரு என நான்கு பாதைகள் சந்திக்கின்றன. அந்த இடத்தில் ஒரு உயர்கோபுர மின் விளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சுந்தரவடிவேல், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 11:26 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#14807

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

வாணாபுரம் பகுதியில் இருந்து பழையனூர் செல்லும் சாலை சேதமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் சாலையை சீரமைக்க வில்லை. அந்த வழியாக விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் கரும்பு, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அத்துடன் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன. சேதமான சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். -சிவா, வாணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#14805

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் ெதாங்கியபடி ஆபத்தான நிைலயில் பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகதாஸ், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 10:56 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#14804

சாலையோரம் செடி, கொடிகளை அகற்றுவார்களா?

சாலை

கீழ்பென்னாத்தூரில் இருந்து அவலூர்பேட்டை செல்லும் வழியில் கோட்டான் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் இருபுறமும் தற்போது பெய்த மழையால் செடி, கொடிகள், முதர்கள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் விபத்துகள் நடக்கிறது. சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றுமா? -கிருபாகரன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 10:54 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#14803

மின் கட்டணம் செலுத்த கூடுதல் கவுண்ட்டர் தேவை

மின் கட்டணம் செலுத்த கூடுதல் கவுண்ட்டர் தேவைமின்சாரம்

ஆரணியில் மின்கட்டணம் செலுத்த வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு 6 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது ஒரு கவுண்ட்டர் மட்டுமே உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்க அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும். -ஜார்ஜ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 10:07 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#14796

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வேலூர் மாவட்டம் ஊசூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டாரக் கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த 2 வாரமாக எரியவில்லை. இதனால் மருத்துவமனை வளாகம் இருண்டு காணப்படுகிறது. இரவில் வந்து செல்லும் பார்வையாளர்கள், நோயாளிகள் வெளிச்சம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், ஊசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 10:04 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#14795

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள கிருஷ்ணாநகர் போக்குவரத்துக்கழகப் பணிமனையின் எதிரே சங்கரன்பாளையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதம் அடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதுசூதனன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 9:59 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#14793

ஆற்றுப்பாலம் பழுது

ஆற்றுப்பாலம் பழுதுசாலை

பள்ளிகொண்டா அருகே சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் அகரம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆற்றுப்பாலம் பழுதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், அகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick