Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Sep 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#39259

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

அரக்கோணம்-திருப்பதி பிரதான நெடுஞ்சாலையில் நாகாலம்மன் நகர் பகுதி அருகில் வணிக வளாகம், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பாலாஜிநகர் பகுதி அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சூறைக்காற்றுடன் மழை பெய்தால் மின் கம்பம் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#39254

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

பேரணாம்பட்டு புத்துக்கோவில் பகுதியில் உள்ள குடியாத்தம் சாலையில் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. மாடுகள் தொல்லையால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39250

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் கோர்ட்டு அருகே சவுத் அவென்யூ சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சாலை பணிகள் முடிக்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலையின் கீழ்பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#39248

ஓடைகளில் கொட்டப்படும் குப்பைகள்

ஓடைகளில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனத்தில் எடுத்து வந்து, வேட்டவலம் பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து ஓடைகளில் கொட்டுகின்றனர். இதனால் ஓடைகளின் வழியாக பெரிய ஏரிக்கு வரும் தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வராமல் போகும் நிலையும் ஏற்படலாம். எனவே நீர்வரத்து ஓடைகளில் குப்பைகளை கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். -அன்பு, வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#39246

சிறு மின்விசை தொட்டி பழுது

சிறு மின்விசை தொட்டி பழுதுதண்ணீர்

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டு மீனவர் தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை தொட்டி உள்ளது. அந்த தொட்டி 3 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். ஆதலால் நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சிறு மின்விசை தொட்டிைய சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்ய ேவண்டும். -எஸ்.கோபாலகிருஷ்ணன், மீனவர் தெரு, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39244

கழிவறை வசதி செய்யப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களுக்கு வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவறை வசதி போதுமான அளவில் இல்லை. மேலும் நுழைவு வாயில் அருகில் உள்ள கழிவறை சுத்தமில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரம்மா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39239

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் வரும் பக்தர்கள் பூத நாராயணர் கோவில் வழியாக வந்து வட ஒத்தவாடை தெரு வழியாக ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனம் செய்ய செல்கின்றனர். ஆனால் வட ஒத்தவாடை தெரு சாலை குண்டும், குழியுமாக பெயர்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் அந்தப் பகுதி குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது. எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - அருணாசலம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#39236

இரும்பு தடுப்புகள் வைக்க வேண்டும்

சாலை

கண்ணமங்கலம் பேரூராட்சி திருவண்ணாமலை மாவட்ட எல்லையிலும், வேலூர் மாவட்ட எல்லையானது கீழ்வல்லம் கிராமத்திலும் தொடங்குகிறது. 2 மாவட்டங்கள் சந்திக்கும் ஊராக உள்ள இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையை கடக்க சிரமமாக உள்ளது. எனவே கண்ணமங்கலம் நாகநதி ஆற்று மேம்பாலம் அருகே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் வைக்க வேண்டும். -சுபாஷ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39110

இரும்பு தடுப்பு சரி செய்யப்படுமா?

இரும்பு தடுப்பு சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி செவிடாத்தம்மன் கோவில் எதிரே உள்ள தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதையில் இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மேலும் அந்தத் தடுப்பு நடைபாதையில் விழுந்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்வாா்களா?. -ஆமஸ்ராங்க், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39109

தடுப்பு கம்பிகள் வழியாக நுழையும் பொதுமக்கள்

தடுப்பு கம்பிகள் வழியாக நுழையும் பொதுமக்கள்பூங்கா

வேலூர் கோட்டை பூங்காவில் அனுமதியின்றி பொதுமக்கள் உள்ளே நுழையாமல் இருக்க பூங்காவை சுற்றி உள்ள இரும்பு தடுப்பு கம்பியின் உயரம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் நடைமேடை அருகே பூங்காவில் உள்ள தடுப்பு கம்பியை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். அந்த வழியாக பொதுமக்கள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைகிறார்கள். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபாபதி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39108

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகழிவுநீர்

வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் இடத்தில் பாதாள சாக்கடை மூடி உள்ளது. இந்த மூடியின் மேல் பஸ்கள் ஏறி செல்வதால் சேதமடைந்துள்ளது. இந்த மூடியை இதற்கு முன்பு ஒரு முறை மாற்றம் செய்தும் மீண்டும் சேதமடைந்துள்ளது. எனவே தரமான மூடியை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#39107

கழிவறைகளை சுத்தம் செய்வார்களா?

கழிவறைகளை சுத்தம் செய்வார்களா?மற்றவை

ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்தம் செய்ய ஆட்கள் இருந்தும் கழிவறைகள் கேட்பாரற்று உள்ளது. கழிவறைகள் சுத்தமாக இல்லாததால் நோயாளிகள் அங்கு செல்வதே இல்லை. நோயாளிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிவறைகளை சுத்தம் செய்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கந்தவேல், அணைக்கட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick