Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Oct 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41878

சாய்ந்த கம்பம்

சாய்ந்த கம்பம்மின்சாரம்

வேலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே அரசினர் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள ஒரு டெலிபோன் கம்பம் சாலையோர இரும்புத்தடுப்பின் மீது சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிந்துள்ள டெலிபோன் கம்பத்தை சரி செய்ய வேண்டும். -சாமிநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#41876

பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை தேவை

மற்றவை

கே.வி.குப்பம் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான நிழற்குடை இல்லை. இங்கு தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்தம் என்பதை காட்டும் பெயர் பலகையும் இல்லை. பல பஸ்கள் இங்கு நிற்காமல் செல்வதால் வேப்பங்கனேரி அல்லது வடுகந்தாங்கல் என்று அடுத்த பஸ் நிறுத்தம் வரை சென்று, ஆட்டோ பிடித்தோ நடந்தோ திரும்பி வர வேண்டிய அவலத்தில் பயணிகள் உள்ளனர். தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்தில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடராஜன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#41872

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

கே.வி.குப்பம் - மேல்மாயில் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை பக்கத்தில் மதுரைவீரன் கோவில் எதிரில் உள்ள கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும். -வடிவேலு, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41862

நூலகத்தில் போதிய வசதிகள் தேவை

மற்றவை

வேலூரில் உள்ள மாவட்ட பொது நூலகத்தில் மின் விசிறிகள் இருந்தும் சரியாக ஓடவில்லை. ஜெராக்ஸ் மெஷின் இருந்தும் நகல் எடுக்க முடியவில்லை. நூலக கட்டிடத்தை சுற்றி குப்பைகள் கிடக்கின்றன. நூலகத்தில் போதிய வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தயாளன், விருப்பாட்சிபுரம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 6:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41708

உடைந்து கிடக்கும் தீ தடுப்பு வாளிகள்

உடைந்து கிடக்கும் தீ தடுப்பு வாளிகள்மற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஒரு சிலர் அவ்வப்போது தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவற்றைத் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தீத்தடுப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் குறை தீர்வு கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள தீ தடுப்பு வாளிகள் உடைந்து பயன்பாடற்ற நிலையில் கிடைக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய தீத்தடுப்பு வாளிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 6:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41707

வழிகாட்டி பெயர் பலகையை முறையாக வைப்பார்களா?

வழிகாட்டி பெயர் பலகையை முறையாக வைப்பார்களா?மற்றவை

வேலூர்-ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே வேலூர் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட எல்.ஐ.சி. காலனி பகுதியின் பெயர் பலகை ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டு மேலும் உடைந்து சாக்கடையில் விழும் நிலையில் உள்ளது. இதில் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே இதை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -உலகநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:57 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#41706

கிளறி விட்ட சாலை

கிளறி விட்ட சாலைசாலை

அணைக்கட்டு ஒன்றியம் ஒதியத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபுரம் கிராமத்துக்கு செல்ல தாங்கல் பகுதியில் இருந்து 440 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க 5 மாதத்துக்கு முன்னால் தார் சாலையை கிளறி விட்டனர். ஆனால் இன்னும் சாலை பணியை தொடங்கவில்லை. அந்த வழியாக செல்வோரின் கால்களையும், டயர்களையும் ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். -சந்திரமோகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 6:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41705

சாலைகள் சேதம்

சாலைகள் சேதம்சாலை

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியில் கெங்கையம்மன் கோவில், சிறிய காய்கறி மார்க்கெட், மருந்தகங்கள் மற்றும் ஓட்டல்கள், பல கடைகள் உள்ளன. இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது. பேஸ்-2 வில் உள்ள மடம் தெரு, தஸ்தகிரி தெரு, கானாறு தெரு ஆகிய தெருக்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், முதியோர், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூமிநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41704

கோட்டை சுவரில் வளரும் செடிகள்

கோட்டை சுவரில் வளரும் செடிகள்மற்றவை

ேவலூர் கோட்டையைச் சுற்றி உள்ள சுவர்களில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்கள் வளர்ந்து வருகிறது. இதனால் சுவர்கள் விரிசல் விடும் அபாயம் ஏற்படும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டை சுவர்களில் வளரும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும். -சரவணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:46 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#41703

உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவாரா?

மற்றவை

சோளிங்கர் தாலுகா குன்னத்தூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு நிரந்தர உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வந்து செல்கிறார். எனினும், பள்ளிக்கு நிரந்தர உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -முருகன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#41702

ஆபத்தான இரும்புக்கதவு

ஆபத்தான இரும்புக்கதவுபூங்கா

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வாசுகிநகரில் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டது. அதில் தினமும் ஏராளமான குழந்தைகள் விளையாடுகின்றனர். பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள இரும்புக்கதவு கழன்று ஆபத்தான நிலையில் சாய்வாக உள்ளது. இதை, சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பக்கம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41695

மாடுகளை பிடிக்க வேண்டும்

மற்றவை

வாலாஜா நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலை உள்பட பிரதான சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. அந்த மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறும், நெரிசலும் ஏற்படுகிறது. ஒருசில நேரத்தில் விபத்துகளும் நடக்கின்றன. மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -அன்பரசன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick