28 July 2024 12:58 PM GMT
#48617
குப்பைகள் அகற்றப்படுமா?
பொழிச்சலூர்
தெரிவித்தவர்: அரசு
செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவில் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும், அந்த இடத்தில் புதிய குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.