7 Dec 2022 2:22 PM GMT
#23091
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: சிவசுப்பிரமணியம்
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் இருந்து காவேரிநகர் செல்லும் சாலையில் 2 குப்பைத்தொட்டிகள் உள்ளன. இந்த குப்பைத்தொட்டிகள் நிரம்பியதோடு குப்பைகள் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அங்கு பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நாய்கள், மாடுகள் அந்த குப்பைகளில் உள்ள கழிவுப்பொருட்களை இழுத்து வந்து சாலையில் போட்டு செல்கிறது. அதனால் அந்த சாலையில் விபத்துகள் நடக்கிறது. எனவே குப்பைகள் உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?