கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்
குலசேகரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: மணிமாறன்
சிற்றாறு பட்டணம்கால்வாய் சிற்றாறு அணையிலிருந்து தொடங்கி குலசேகரம் வழியாக பாய்கிறது, இதில் குலசேகரத்தில் பல இடங்களில் இந்தக் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக குலசேகரம் படநிலம், மணலிவிளை உல்ளிட்ட இடங்களில் வீடுகளில் உள்ள குப்பைகளை பொதுமக்கள் நேரடியாக கால்வாயின் பாலம் பகுதியில் கால்வாயினுள் கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் கால்வாய் தண்ணீர்ைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது குப்பையில்லாத குமரி மாவட்டம், எனது குப்பை எனது பொறுப்பு என பல்வேறு குப்பை மேலாண்மை நடவடிக்கள் குமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட நிலையிலும், குப்பைகளை கால்வாய்களில் கொட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகவே உள்ளது. எனவே குலசேகரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் குப்பைகளை கால்வாயில் கொட்டுவதை தடுப்பதுடன், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்ைககளையும் எடுக்க வேண்டும்.