29 Aug 2022 9:10 AM GMT
#11409
சேதமடையும் மரத்தடிகள்
பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: Mr.Pathiman
தும்பகோடு கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அரசு புறம்போக்கு பகுதியில் வெட்டப்பட்ட அயனி மரத்தடிகள் கடந்த சில ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மரத்தடிகள் வெயிலினாலும், மழையில் நனைந்தும் நாளுக்கு நாள் சேதமடைந்து வருகின்றன. மேலும் மரத்தடிகளுக்கு இடைேய விஷப்பிராணிகளும் அடைக்கலம் புகுந்து வருகின்றன. எனவே, இவற்றை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஏற்படுத்தவும், அலுவலக வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தங்கராஜ், தும்பகோடு.