பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டி

Update: 2026-07-26 14:04 GMT

பெரம்பலூர் வட்டம் செங்குணம் புது கருப்புசாமி கோவில் தென்பகுதி தார்சாலையில் இருந்து ஐ.டி.ஐ. செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டில், 2023-24-ம் ஆண்டு கிராம ஊராட்சி பொது நிதியில் இருந்து ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின்மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த தண்ணீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாததால், பல்வேறு தேவைகளுக்கு இதை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்