பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் அண்ணா நகரில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் எந்திரம் பழுதடைந்து முற்றிலும் முடங்கியுள்ளது. ரூ.5 நாணயம் செலுத்தி தங்கு தடையின்றி குடிநீர் பெற்று வந்த பொதுமக்கள், இந்த பழுது காரணமாக கடந்த சில நாட்களாக சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் மையத்தின் எந்திரத்தை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.