வீணாகும் குடிநீர்

Update: 2026-07-19 13:40 GMT

கூடலூர் ராக்லேண்ட் தெரு பகுதியில் ஓவேலி சாலையோரத்தில் சோதனைச்சாவடி அருகே உள்ள குடிநீர் குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த உடைப்புகளில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக ஆறு போல சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி பழுதடைந்த குழாய்களுக்கு பதிலாக புதிதாக குழாய்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்