விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில் பாரதிராஜா தெருவின் முக்கிய சாலை அருகே உள்ள குடிநீர் குழாயில் பல நாட்களாக தண்ணீர் வினியோகமின்றி குழாய் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தண்ணீரை சிலர் காசு கொடுத்து வாங்குகின்றனர். எனவே அப்பகுதி குழாயில் உள்ள பழுதை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்குவார்களா?