நல்லவாடு மீனவ கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகில் பழமை வாய்ந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க ்தொட்டி சேதமடைந்து உள்ளது. அங்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. சேதமடைந்த குடிநீர் தொட்டியானது ஆபத்தான நிலையிலும் காட்சி பொருளாகவும் காணப்படுவதால் இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.