சீரான பஸ்வசதி தேவை

Update: 2026-09-27 07:16 GMT

திருப்பதிசாரம் பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்காகவும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் நாகர்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நாகா்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி, ராஜாவூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் 15 ‘ஏ’,34,33‘டி’ ஆகிய பஸ்கள் திருப்பதிசாரம் வழித்தடத்தில் ஆகிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் , இந்த பஸ்கள் மக்களின் தேவைக்கேற்ப இயக்கப்படுவில்லை. இதனால், நாகர்கோவிலுக்கு வரும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மாலையில் வீடு திரும்புவதற்கும், இரவு வேலை முடிந்து செல்லும் பெண்கள் சரியான பஸ் வசதி இல்லாததால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் மேற்கூறிப்பட்ட வழித்தடத்தில் பஸ்களை சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரேவதி, திருப்பதிசாரம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி