ராமநாதபுரம் நகர் பகுதி அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் அதிவேகத்தில் செல்கின்றனர்.இதனால் பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் சாலையில் பயணிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?