அதிக ஒலி எழுப்பும் கனரக வாகனங்கள்

Update: 2022-07-25 16:21 GMT

திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கனரக வாகனங்கள் அதிக ஒலி (ஹாரன் ) எழுப்ப கூடாது என போக்குவரத்து விதி உள்ளது. ஆனால் திண்டுக்கல் சாலைகளில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் அதிக ஒலி எழுப்பி சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்