நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சேரிங்கிராஸ் முதல் ஊட்டி பஸ் நிலையம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.