நாமக்கல் உழவர்சந்தையில் இருந்து திருச்செங்கோடு சாலைக்கு செல்ல சமீபத்தில் எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை தற்போது ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையோரமாக சுமார் 3 அடி ஆழத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.