நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே விபத்துக்களை தடுக்கும் வகையில் பிரதான சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தடை முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு அகற்றப்பட்டது. பின்னர் மீண்டும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் வாகனங்கள் வேகமாக செல்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விபத்து ஏற்படும் முன்பு அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.