போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-09 14:22 GMT
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக கடைவீதிக்கு வருபவர்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதன்காரணமாக மேற்கண்ட பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

பஸ் வசதி